பெண்களே..! நார்ச்சத்து உணவு சாப்பிட்டால் சிறுநீரகக் கல் உருவாகும்..
தமிழ் உலகம்,
1171
பெண்களே..! நார்ச்சத்து உணவு சாப்பிட்டால் சிறுநீரகக் கல் உருவாகும்..
இது பெண்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. நாள் ஒன்றுக்கு 21 கிராம் நார்ச்சத்து கொண்ட உணவுப் பொருள் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு சிறுநீரகக் கல் உருவாகும் அபாயம் 22 சதவிகிதம் குறைகிறது.
ஓர் ஆய்வுக்காக சில கேள்விகளைக் குறும்படமாகத் தயார் செய்து வைத்திருந்தார்கள் இங்கிலாந்தின் ஆஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். கேள்விகள் கேட்கப்பட்ட போது, கண்களை மூடிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டவர்கள், கண்களைத் திறந்து கொண்டிருந்தவர்களைவிட 23 சதவிகிதம் அதிக கேள்விகளுக்கு சரியான பதில்களைச் சொல்லியிருக்கிறார்கள். ‘இதற்கு காரணம், கண்களை மூடிக்கொள்ளும்போது மூளைக்குக் கொடுக்கப்படும் அழுத்தமும் கவனச்சிதறலும் குறைவதுதான். நினைவாற்றலும் இதன்மூலம் அதிகரிக்கிறது’ என்கிறார் ஆய்வை மேற்கொண்ட மனோதத்துவப் பேராசிரியரான ராபர்ட் நாஷ்.
உடற்பயிற்சியை 5 நாட்களுக்கு மேல் நிறுத்தினால் மேம்பட்டு வந்த ரத்த நாளங்களின் செயல்திறன் மீண்டும் குறைவதாக ஓர் ஆய்வு கூறியிருக்கிறது. இதனால் உடற்பயிற்சி செய்யாதவர்களைப் போலவே ரத்த அழுத்தமும் இதயநோய்களும் உருவாகும் வாய்ப்புகளும் உண்டு என்று எச்சரித்திருக்கிறது அந்த ஆய்வு.
மைக்ரேன் எனப்படுகிற ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்ட சிலருக்கு வலி நிவாரணி என்கிற பெயரில் போலியான ஒரு மாத்திரையைக் கொடுத்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். அடுத்த சில நிமிடங்களில் 25 சதவிகிதம் வலி குறைந்ததாக உணர்ந்திருக்கிறார்கள். கொடுக்கப்பட்ட மாத்திரை வலிக்கானது அல்ல என்றாலும், அது வலி நிவாரணி என அவர்கள் நம்பியதே வலி குறைந்ததற்குக் காரணம் என்கிறது ஒரு தரப்பு. எது எப்படியோ… பாசிட்டிவ் சிந்தனை என்பது வலிக்குக் காரணமான நியோரனல் சர்க்யூட்டுகளை தூண்டி விட்டு, வலியைக் குறைக்கும் என்கிறது விஞ்ஞானம்!
தியானத்தின் நன்மைகள் பற்றி அமெரிக்காவின் ‘வேக் ஃபாரஸ்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசின்’ ஆய்வு ஒன்று நடத்தியிருக்கிறது. ஆய்வின் முடிவில் தியானத்தின்போது 39 சதவிகிதம் மனப்பதற்றம் குறைந்து அமைதியடைவதை அறிவியல்பூர்வமாகக் கண்டறிந்திருக்கிறார்கள். ‘தியானம் செய்யும்போது கோபம், பதற்றம் போன்ற எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் மூளையின் பகுதிகள் செயலிழந்துபோவதை உணர்ந்தோம்’ என்று சிலிர்த்திருக்கிறார்கள் ஆய்வில் பங்கு கொண்ட அமெரிக்கர்கள்.
முதுகுவலியை உண்டாக்குவதில் நாம் எதிர்பாராத காரணங்களும் பங்கு வகிக்கின்றன என்பதை உணர்த்தும் தகவல் இது. பாதங்களின் நடுப்பகுதி சற்று உள்முகமாகப் பலருக்கும் வளைந்திருக்கும். ஆனால், தட்டையான பாதங்கள் கொண்டவர்களில், குறிப்பாகத் தட்டையான பாதங்கள் கொண்ட பெண்களுக்கு முதுகுவலி வரும் வாய்ப்புகள் 50 சதவிகிதமாம்.
இது உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கு சந்தோஷம் தரும் செய்தி. வாரத்தில் 6 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கு
பார்க்கின்ஸன் எனும் நரம்பியல் நோய் வரும் வாய்ப்பு 43 சதவிகிதம் குறைவதாக ஓர் ஆய்வு கூறியிருக்கிறது. குறைந்தபட்சம் நாய்க்குட்டியைக் கூட்டிக்கொண்டு வாக்கிங்கோ அல்லது லிஃப்ட்டை பயன்படுத்தாமல் படிகளில் நடந்தாவது செல்லுங்கள் என்று ஆலோசனையையும் கூறியிருக்கிறார்கள்.