தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு இரண்டு குழந்தைகள் கற்பழிப்பு அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு இரண்டு குழந்தைகள் கற்பழிப்பு அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு இரண்டு குழந்தைகள் கற்பழிப்பு அதிர்ச்சி தகவல்
 
குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2014-ம் ஆண்டு பதிவான வழக்குளில் தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு குழந்தைகள் கற்பழிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் உத்தரப் பிரதேசத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து குழந்தைகள் கற்பழிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட குழந்தை உள்ள மாநிலமாக முதல் இடத்தில் உத்தரப் பிரதேசம்(3,637) உள்ளது. 1,084 பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரப்படி வழக்குகள் போஸ்கோ சட்டத்தின் கீழ் மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 376 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போஸ்கோ சட்டத்தின் கீழ் 1,055 வழக்குக ள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 168 வழக்குகள் கற்பழிப்பு
சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டன. மேலும் சில வழக்குகள் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குழந்தை பாதுகாப்பு தொழிலாளர்களின் இந்த புள்ளிவிவரங்கள் கடுமையான போஸ்கோ சட்டம் பற்றி விழிப்புணர்வு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிகமாக உள்ளது. பாலியல் குற்றங்கள் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான துளிர் தலைவர் வித்யா ரெட்டி போஸ்கோ சட்டம் மூலம் வழக்குகள் பதிவு செய்த தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்