ஒவிய ஆசிரியருக்கு விருது

ஒவிய ஆசிரியருக்கு விருது

தமிழ்நாடு சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக ஓவியரும், கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியருமான மோகன்குமார் ஓவிய சேவையை பாராட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீகலா பீடம் சார்பில் சிறந்த ஓவியருக்கான ஓவிய வித்ய ரத்னா விருது வழங்கப்பட்டது. அந்த அமைப்பு சார்பில் திரைப்பட இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம், மற்றும் இயற்கை வைத்தியர் சக்தி சுப்பிரமணியம் ஆகியோர் இந்த விருதினை ஓவிய ஆசிரியர் மோகன்குமாருக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற ஓவிய ஆசிரியரை கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலாமரி ரோசலின், பள்ளி ஆசிரியர்கள், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார், மாநில ஆலோசகர் ராஜகோபால், பசுமை இயக்க ராஜாராம், ஸ்கேட்டி பயிற்சியாளர் கண்ணன், யோகா பயிற்சியாளர் கார்த்தி ஆகியோர் பாராட்டினர்.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்