மாநில தடகளப் போட்டிக்கு கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு

மாநில தடகளப் போட்டிக்கு கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு

மாநில தடகளப் போட்டிக்கு கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு

2015-16 கல்வியாண்டிற்கான பெரம்பலூர் மண்டல அளவிலான பள்ளிகளுக்கிடையேயான  குடியரசு தின தடகளப் போட்டிகள் பெரம்பலூர் விளையாட்டு (SDAT) மைதானத்தில் நடைபெற்று. அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் உடையார்பாளையம் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் கலந்துகொண்டன அதில் கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 19 வயதிற்குட்பட்டோர். மாணவர்கள் பிரிவில் V.அஜித்குமார் 11ம் வகுப்பு, 100மீ, 200மீ மற்றும் 4X100மீ தொடரோட்டத்தில் முதலிடத்தையும், s.யுகன் 11ம் வகுப்பு 100மீ மற்றும் 200மீ போட்டியில் இரண்டாம் இடத்தையும் 4X100மீ தொடரோட்டத்தில் முதலிடத்தையும், s.கரன் மற்றும் P.பிரசன்னா ஆகிய 11ம் வகுப்பு மாணவர்கள் 4X100மீ தொடரோட்டத்தில் முதலிடத்தையும், 14 வயதிற்குட்பட மாணவியர்  பிரிவில் S.துர்கா 8ம் வகுப்பு மாணவி 600மீ மற்றும் 400 மீ ஓட்டப் போட்டியில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் வருகிற 04, 05, 06.12.2015 ஆகிய தேதிகளில் கோவையில் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் மாநில போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளர் ஆர்த்தி. R.சாமிநாதன் அவர்களும். பள்ளி ஆலோசகர் P.பழனியப்பன் அவர்களும், பள்ளி முதல்வர் D.பிரகாசம் அவர்களும், நிர்வாக அலுவலர் s.ரவிகுமார் அவர்களும், விடுதி மற்றும் வாகன அலுவலர் தனபால் அவர்களும், உடற்கல்வி இயக்குனர் P.மகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகளும் வாழ்த்து தெரிவித்தனர்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்