1009 ரன்கள் குவித்து பள்ளி மாணவனுக்கு சச்சின், டோனி மற்றும் ரகானே பாராட்டு | Mumbai’s Dhanawade hits 1,009 runs in 323 balls.
வெளயுர் விளையாட்ட,
1177
1009 ரன்கள் குவித்து பள்ளி மாணவனுக்கு சச்சின், டோனி மற்றும் ரகானே பாராட்டு | Mumbai’s Dhanawade hits 1,009 runs in 323 balls.
மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கிடையிலான பண்டாரி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் திருமதி கே.சி. காந்தி பள்ளி சார்பில் கலந்து கொண்ட அணியில் பிரணவ் தனவாடே என்ற 15 வயது சிறுவன் இ 395 நிமிடங்கள் களத்தில் நின்று 323 பந்துகளை சந்தித்த அவர், 129 பவுண்டரி, 59 சிக்சர்களுடன் 1009 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அதிகபட்ச ரன் அடித்த வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
உலக சாதனை படைத்துள்ள பிரணவ் தனவாடேவுக்கு இந்திய அணி கேப்டன் டோனி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது “ 1009 ரன்கள் குவிப்பது என்பது ஜோக் இல்லை. இது மிகப் பெரிய விஷயம். அவரது திறமை பாதுகாக்கப்பட வேண்டும். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
நீண்ட நேரம் பேட்டிங் செய்வது என்னை பொருத்த வரையில் அலுப்படைய வைக்கும் விஷயம் ஆகும். ஆனால் அவர் அதை செய்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் சச்சின், ராகனே, ஆகாஷ் சோப்ரா ஆகியோரும் பிரணவ் தனவாடேக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.