டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்த மெக்கல்லம்
வெளயுர் விளையாட்ட,
1188
டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்த மெக்கல்லம்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் இன்று துவங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 370 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த போட்டியோட்டு சர்வதேச போட்டிகளில்
ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள பிரென்டன் மெக்கல்லம் தனது கடைசி போட்டியில் 54 பந்துகளில் சதம் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார். சதம் அடித்த பிறகும் தொடர்ந்து அதிரடி காட்டிய மெக்கல்லம் 79 பந்துகளில் 21 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் உட்பட 145 ரன்களை சேர்த்த பின்னர் ஆட்டமிழந்தார்.
இதற்கு முன்னதாக அதிவேக சதம் அடித்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்டுஸும், பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக்கும் பகிர்ந்து இருந்தனர். இவர்கள் 56 பந்துகளில் சதம் அடித்து இச்சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.
முன்னதாக மெக்கல்லம் இந்தப் போட்டியில் 39 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது ஜேம்ஸ் பேட்டின்சன் பந்தை கல்லி திசையில் வெட்டி விட்டபோது அதை மிட்செல் மார்ஷ் அபாரமாக தாவிப்பிடித்தார். ஆனாலும், மூன்றாவது நடுவர் ஆய்வுக்கு பிறகு இது நோ பால் என அறிவிக்கப்பட்டதால், மெக்கல்லம் தப்பினார் என்பது கவனிக்கத்தக்கது.