ஏழை ஹிந்து சடலத்தை, அவரின் மத வழக்கப்படி தகனம் செய்ய உதவிய முஸ்லிம்கள்!

ஏழை ஹிந்து சடலத்தை, அவரின் மத வழக்கப்படி தகனம் செய்ய உதவிய முஸ்லிம்கள்!

ஏழை ஹிந்து சடலத்தை, அவரின் மத வழக்கப்படி தகனம் செய்ய உதவிய முஸ்லிம்கள்!
 
இது சொல்லப்பட வேண்டிய தருணம் இது.
 
60 வயதுடைய பாலா ராஜு என்பவரின் சடலத்தை தூக்கிச் செல்லும் கூட்டத்தை பார்த்தவர்களுக்கு, மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது அதில் கலந்து கொண்டவர்களில் அதிகம் முஸ்லிம்கள் தான்.
 
பாலா ராஜு, ஒரு செல்வாக்குள்ள மனிதரும் அல்ல...
விசாரித்து பார்க்கும்போது, பாலா ராஜு ஹைதராபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் பகுதியில், மனைவியோடு வசித்து வந்துள்ளார். குழந்தைகள் இல்லாத நிலையில், ரேவதி என்ற பெண்ணை தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளார்.
எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ள பாலா ராஜு, நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இருக்கும்போது மரணித்துள்ளார்.
 
வெளியில் சென்று வந்த மனைவி, அவர் இறந்து இருப்பதை பார்த்துவிட்டு, தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரரான பாத்திமா என்ற முஸ்லிம் பெண்ணிடம், தன் கணவனின் உடல் மோசமான நிலையை அடைந்து விட்டதாக சொல்லியுள்ளார். பாத்திமா, அந்த பெண்ணிடம் ஏதேனும் உதவி தேவையா என்று கேட்டபோது, தன்னிடம் அடக்கம் செய்வதற்கு வசதியில்லை என்று சொல்லி உள்ளார்.
 
அங்கே உள்ள முஸ்லிம்கள் அனைவரும் பணம் கொடுத்து, ஹிந்து முறைப்படி அடக்கம் செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்து, மயானம் வரை சென்றுள்ளனர். வளர்ப்பு மகள் தீயூட்ட, பாலா ராஜுவின் இறுதி சடங்கு நல்ல முறையில் நடந்தது.
 
தங்களின் அரசியல் லாபத்திற்காக, மக்களை ஜாதி/மத ரீதியாக பிரித்து, வதந்திகள் மூலம் வன்முறையை தூண்டுபவர்கள், ஒரு போதும் இது போன்ற சூழ்நிலைகளில் முன்வர மாட்டார்கள்.நியாய உணர்வு உள்ள மக்கள் ஒவ்வருவரும் சிந்திக்க வேண்டும். வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பது தான் இந்தியனின் இயல்பு.
 
ஒருவருக்கு ஒருவர் முடிந்தவரை உதவுவோம்....ஒற்றுமையுடன் வாழ்வோம்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்