கரூரை ஏன் தலைநகரமாக மாற்றக் கூடாது!!!

கரூரை ஏன் தலைநகரமாக மாற்றக் கூடாது!!!

கரூரை ஏன் தலைநகரமாக மாற்றக் கூடாது!!!
 
 அதற்கு முன்னால் சிறிய வரலாறு
லெமுரியா மற்றும் பூம்புகார் போன்றவை அழிந்த பிறகு நமது முன்னோர்கள் கடற்கரையில் தலைநகரங்கள் அமைப்பதை தவிர்தார்கள் . தலை நகரத்தை சுற்றி மக்கள் அதிகம் இருப்பார்கள் என்பதாலும் இது போன்ற இயற்கை சிற்றத்தால் அழிவு அதிகம் என்பதாலும் தான் சேரன் மன்னன் வஞ்சியையும் (கரூர்) ,சோழர்கள் தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், பாண்டியர்கள் மதுரை போன்று நாட்டின் உட்பகுதியையே தேர்ந்தெடுத்தார்கள். கடைசியாக நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் கடல் கடந்து வந்த காரணத்தினால் கடற்கரையில் நகரைநிர்மாணித்தார்கள் .அதனால் தான் நமக்கு இத்தனை அழிவு ஏற்பட்டிருக்கிறது.
இனிமேலாவது நமது முன்னோர்களை போல் நாமும் ஆட்சி செய்வோம் .
இப்பொழுது விசயத்திற்கு வருகிறேன் .
கரூரை ஏன் தலைநகராக்க வேண்டும் .
(1) கரூர் தமிழ்நாட்டின் மைய பகுதி ஆகும்.
(2) கரூர் கடல் மட்டத்தில் இருந்து உயரமாக இருப்பதால் எவ்வளவு மழை வந்தாலும் ஓன்றும் ஆகாது .
(3) கரூரில் நிலநடுக்க வாய்ப்பு இல்லை .
(4) கரூரில் இருந்து சேலம்(100km) ஈரோடு(65km), மதுரை(145km), திருச்சி(75km), திண்டுக்கல்(75km), கோவை(120km), திருப்பூர்(90km) ஆகியவை சுமார் 65 to 150 Km க்குள் உள்ளதால் அடுத்த 200 ஆண்டுகளுக்கு மக்கள் நெருக்கம் போக்குவரத்து போன்றவற்றை திட்டமிட்டு செயல் படுத்த முடியும் .
(5) கரூரில் நான்கு பக்கமும் புறவழி சாலைகள் உண்டு.
(6) அருகில் ஏற்காடு , நீலகிரி , கொடை கானல் , கொல்லிமலை போன்றவை கோடைவாஸ்தலமாக உள்ளது .
(7) தமிழகம் முழுவதிலும் இருந்து அனைத்து மக்களும் இரவு வண்டி ஏறினால் காலை வந்து விடலாம், காரணம் கரூர் தமிழ்நாட்டின் மைய பகுதியில் உள்ளது. 
(8) பண்டிகை காலங்களிலும் இது போன்ற இயற்கை சீற்றங்களிலும் மக்கள் தலைநகரை விட்டு மிக விரைவில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வெளியேறலாம் .
ஏன் திருச்சியை ஆக்க கூடாதா என்பார்கள், காவேரியில் 5 லட்சம் கன அடி நீர் வந்தால் திருச்சி தஞ்சாவூர் போன்றவை நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது .கரூர் நடுவில் இருப்பதால் அடுத்த 200 to 300 ஆண்டு களுக்கு வளர்ச்சி பாதையில் தடை இல்லாம் செல்லும்.
வழக்கறிஞர்களே எத்தனையோ பொது நல வழக்கு தொடுக்கிரிர்கள் இதையும் சற்று யோசித்து பாருங்கள் .
எப்படியும் இப்பொழுது சென்னைக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு சுமார் 50,000
கோடி இருக்கலாம் .இத்தனை தொகை செலவு செய்தும் மூன்று நாள் மழை வந்தால் முற்றிலும் போய் விடும்.
அதை புதிய நகர் உருவாக்குவதற்கு செலவு செய்தால் அடுத்த பல தலை முறை கள் நன்றாக இருக்கும் .
திரு சந்திரபாபு நாயுடு அவர்களால் புதிய தலை நகரை உருவாக்க முடியும் என்றால் நம்மால் ஏன் முடியாது.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்