நடிகர் ரஜினிகாந்த்க்கும் இயக்குநர் சங்கருக்கும் 3 நாள் அவகாசம்.
							
								
								
								
									
									திரை செய்திகள, 
									
								
								1509	
							
							
						
							
						
						 
							நடிகர் ரஜினிகாந்த்க்கும் இயக்குநர் சங்கருக்கும் 3 நாள் அவகாசம்.
தமிழர் முன்னேற்றப் படை
எந்திரன்-2 படத்தில் நடிக்கும் கதாநாயகி எமிஜாக்சனை படத்தில் இருந்து நீக்கியதாக அறிவிக்க வேண்டும்.
இல்லையெனில் வரும் திங்கட்கிழமை அன்று தென்னிந்திய நடிகர் சங்கம் முற்றுகை போராட்டம் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சங்கர் வீடு முற்றுகை போராட்டமாக மாறும்.
எந்திரன்-2 படப்பிடிப்பு இடத்தை எல்லாம் தமிழர்முன்னேற்றபடை ஆர்ப்பாட்டம் செய்யும்
நடிகை எமிஜாக்சன் எந்திரன்-2 படப்பிடிப்பில் தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.அவரின் Twitter பக்கத்திலும் அதை வலியுறுத்தியுள்ளார்.
எங்கள் தமிழ் மண்ணில் பிழைப்புக்காக வரும் நடிகர்,நடிகைகள் எல்லாம் பணம் சம்பாதித்தது போக எங்கள் பண்பாட்டிலும் மூக்கை நுழைப்பது இனி எங்கள் காலத்தில் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்
கி.வீரலட்சுமி
நிறுவனத்தலைவர்
தமிழர் முன்னேற்றப் படை.
					 
 
					
