பரணி பார்க் வித்யாலயா 127 பேருக்கு நாட்டின் மிக உயர்ந்த “குடியரசு தலைவர் விருது” மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு

பரணி பார்க் வித்யாலயா 127 பேருக்கு நாட்டின் மிக உயர்ந்த “குடியரசு தலைவர் விருது” மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு

பரணி பார்க் வித்யாலயா  
127 பேருக்கு நாட்டின் மிக உயர்ந்த
“குடியரசு தலைவர் விருது”
மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு 
 
பரணிபார்க் வித்யாலயாமாணவ மாணவியர் 127 பேர் நாட்டின் மிக உயரிய விருதான குடியரசுத்தலைவர் (ராஷ்டிரபதி) விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 
 
குடியரசு தலைவர் விருதுபெற்ற127மாணவ, மாணவியர் மற்றும் அவர்களை அர்ப்பணிப்பு உணர்வோடு பயிற்றுவித்து கரூர் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அவர்களது ஆசிரியர்களையும்கரூர்மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.ஜெயந்தி,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அண்மையில்  நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் பாராட்டிவாழ்த்தினர்.
 
தமிழ்நாடு பாரத சாரண,சாரணியமாநில தலைமையகம் 2015 ம் ஆண்டிற்கானகுடியரசு தலைவர் விருதுபெற்றுள்ள தமிழக மாணவ, மாணவியர் பெயர்ப் பட்டியலைஅண்மையில் வெளியிட்டது.கரூர் மாவட்டத்தில் இருந்து பரணி கல்விநிறுவனத்தைச் 54 மாணவர்கள், 73 மாணவிகள்,மொத்தம் 127 சாரண, சாரணியர் இவ்வாண்டிற்கான இந்த  உயரிய விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் பல்வேறு விருதுகளில், நாட்டிலேயே மிக உயரிய விருது ‘குடியரசு தலைவர் விருது’ என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
ராஷ்டிரபதி விருது பெறும்மாணவர்கள்குறைந்தது நான்கு வருடங்களாவது சாரணர்பயிற்சி பெற்று, பல்வேறுதகுதி நிலை பரிசுகளையும், மாநில உயர் விருதான ஆளுநர் விருதும் ஏற்கனவே பெற்றிருக்க வேண்டும். பின்னர் தேசிய தலைமையகம் மூலம் நடைபெறும் “குடியரசு தலைவர் விருது’ தேர்வு முகாமிற்கு அழைக்கப்பட்டு, பல்வேறு துறைகளில் கடுமையான  சோதனைகள் நடத்தப்பெற்று, இறுதியில் குடியரசு தலைவர் விருதிற்கு பரிந்துரை செய்யப் படுவார்கள். புது தில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் விரைவில்  நடைபெற உள்ள ‘தேசிய விருது வழங்கும் விழாவில் இவ்விருதுகளை குடியரசு தலைவர் மாணவர்களிடம்வழங்குவார்.
 
“கரூர் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் இத்தகைய இமாலயவெற்றிக்குபெரிதும் உறுதுணையாகவும் வழிகாட்டுதலாகவும்  இருந்த எமது பரணி பார்க் குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கண், செயலர் பத்மாவதி, சாரணர் இயக்க மாநில தலைமையக நிர்வாகிகள், மாவட்ட கல்வித் துறை உயர் அதிகாரிகள், தேசப்பற்றும் மிகுந்த அர்ப்பணிப்புணர்வும் கொண்ட எமது ஆசி¡¢யர் குழுஆகிய அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். மேலும்,தேசத்தை கட்டமைப்பதற்கானவலுவான முயற்சி, இடைவிடாத உழைப்பு, முன்னெடுத்துச் செல்லும்பாங்கு ஆகியவை பரணி வளாகத்தில் தொடர்ந்து நடைபெறுவதைக் கண்டு தமிழ்நாடு சாரண, சாரணியமாநில தலைமையகம் பரணி பார்க் பள்ளியை ‘சாரண, சாரணியத்தின் தனி மாவட்டமாக’ அண்மையில் அங்கீகரித்துள்ளது. தாய்நாட்டுப் பற்று மிக்க, திறமையான எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் எங்களது தேசியப் பணி செவ்வனே தொடரும்”,என பரணி கல்விக்குழும முதன்மை முதல்வர், முனைவர்.C.ராமசுப்பிரமணியன்,இது குறித்து கூறினார்.
 
பரணி பார்க் வித்யாலயா 127 பேருக்கு நாட்டின் மிக உயர்ந்த
“குடியரசு தலைவர் விருது” மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு 
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்