கரூர் மாவட்டத்தில் +2 அரசு பொதுத் தேர்வு தமிழ் பாடத்தினை 9,392 மாணவ,மாணவியர்கள் எழுதுகிறார்கள்.
கல்வி நிகழ்வுகள்,
137
கரூர் மாவட்டத்தில் +2 அரசு பொதுத் தேர்வு தமிழ் பாடத்தினை 9,392 மாணவ,மாணவியர்கள் எழுதுகிறார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மீ.தங்கவேல்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் தேர்வுத் துறையால் நடத்தப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டுபொதுத்தேர்வு 01.03.2024 முதல் 22.03.2024 வரையில் நடைபெறவுள்ளது.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை 43 தேர்வு மையங்களில் 104 மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறுகிறது. முதல்நாளான இன்று தமிழ் பாடத்தினை 9392 மாணவ,மாணவியர்களும், பிரென்ச் பாடத்தினை 22 மாணவ,மாணவியர்களும் மற்றும் அரபிக் பாடத்தினை 132 மாணவிகளும் என மொத்தம் 9,546 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுதுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மீ.தங்கவேல், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி சுமதி உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், கரூர் மாவட்டம்.