கரூர் மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக ராஜேஷ் பதவியேற்பு

கரூர் மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக ராஜேஷ் பதவியேற்பு

கரூர் மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக ராஜேஷ் பதவியேற்பு
 
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய டி.பி.இராஜேஷ் இன்று (22-01-16) கரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே இவர் 2009 லிருந்து 2010 வரை முதல் அமைச்சரின் சிறப்பு பிரிவின் தனி அதிகாரியாக பணியாற்றி பின்பு 2010 மார்ச் மாதம் 27 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார்.
 
2011 ம் ஆண்டு 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றத்தில் மே மாதம் 31 ம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ் வளர்ச்சித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, செய்தித்துறை துணை செயலாளராகவும் பணியாற்றி பின்பு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.
 
பின்னர் தேர்தல் நன்னடத்தை விதி காரணமாக தமிழகத்தில் இருந்த மாவட்ட ஆட்சியரை கடந்த 20 ம் தேதி அரசு மாற்றியது. இதையடுத்து கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக டி.பி.இராஜேஷ் இன்று காலை சரியாக 9 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் இவருக்கு முன்னாள் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி யாரிடமும், சொல்லாமல் போய் விட்டதாக அதிகாரிகள் தரப்பிலும், செய்தியாளர்களின் தரப்பிலும் கூறப்படுகிறது.
 
இவர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே ஜெயந்தியின் நேம் பிளைட் மாற்றப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் டி.பி.இராஜேஷிடம், சார் தற்போது வெளியில் மாவட்ட ஆட்சியர் என்று போர்டு போட்டுள்ளது, மேலும் அதற்கு கீழே மாவட்ட தேர்தல் அலுவலர் என போர்டு போட்டுள்ளது, எனவே தமிழக முதல்வர் உத்திரவிற்கிணங்க என செய்தி போடட்டுமா ? இல்லை தேர்தல் கமிஷன் உத்திரவிற்கிணங்கவா ? என்று கேட்டதற்கு அரசு உத்திரவிற்கிணங்க என செய்தி போடுங்கள் என கூறினார்.
 
மேலும் தமிழ்வளர்ச்சித்துறையில் பணியாற்றிய தாங்கள் தமிழ் மொழியை சீரழிக்காமல் இருக்க காப்பாற்றுங்கள் எனவும், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் Go – Rt No – 212 என கலெக்டர் உத்திரவு வந்தது. இந்த உத்திரவு chief seacretery Of General K.ஞானதேசிகன் எனவும், Forwared/ By Oredr என்று Deputy Secratery To Governent என பன்னீர் செல்வம் உத்திரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்திரவில் கூட மன்மத வருடம் – தை 6 என்றும், திருவள்ளுவர் ஆண்டு 2047 என்றும் உத்திரவு பிறப்பித்துள்ளது, தமிழக அரசின் உத்திரவில் மட்டுமே தமிழ் உள்ளது, ஆனால் தமிழகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருகிறது என நிருபர்களின் கேள்விக்கு அதற்கான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்றார்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்