கரூர் அருகே மக்கள் தொடர் போராட்டத்தால் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது

கரூர் அருகே மக்கள் தொடர் போராட்டத்தால் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது

பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடல்
 
கரூர் : கரூர் அருகே மக்கள் தொடர் போராட்டத்தால் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது. அரவங்குறிச்சியில் புங்கம்பாடி பிரிவு சாலையில் இயங்கி வந்த கடை மூடப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நீண்ட நாட்களாக போராடி வந்தனர். நேற்றுடன் கடையை மூடிவிடுவதாக ஏற்கனவே அதிகாரிகள் வாக்குறுதி அளித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை கடையை ஊழியர்கள் திறக்க முயற்சித்தபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து டாஸ்மாக் கடையை மூடிவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்