உப்பை போட்டுதான் பாண்டே உணவு உண்டால் இதற்கு பதில் சொல்லட்டும்

உப்பை போட்டுதான் பாண்டே உணவு உண்டால் இதற்கு பதில் சொல்லட்டும்

உப்பை போட்டுதான் பாண்டே உணவு உண்டால் இதற்கு பதில் சொல்லட்டும்
 
இந்த கேடுகெட்ட பாண்டே முன் வைக்கப்படும் கேள்வி இது!
உப்பை போட்டுதான் பாண்டே உணவு உண்டால் இதற்கு பதில் சொல்லட்டும்..
 
(இது ஒருவரின் முகநூல் பதிவின் பிரதி)
 
ஒரு ஆளும்கட்சி எம்.எல்.ஏ, வெளிப்படையாக இந்த அரசையும் ஆளும்கட்சிப் பிரமுகர்களையும் குற்றம் சாட்டுகிறார். கட்சியை விட்டு நீக்கப்பட்டதும், மிக நேர்மையாக தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறார். அவரை அழைத்து வந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு, எப்படியாவது அவர் ஒரு முட்டாள், எதிர்க்கட்சியின் கைக்கூலி என்று நிறுவ நடுநிலை நக்கி ஊடகங்கள் போராடுவது ஏன்?
பழ.கருப்பையா சொன்ன ‘கமிசன் - ஊழல்-மேசையைத் தட்டும் ரோபோக்கள்’ போன்ற பொதுவான குற்றச்சாட்டுகளை விட்டுத்தள்ளுவோம். விகடன் பேட்டியில் துல்லியமாக மூன்று குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அவை:
 
 
//1. துறைமுகம் தொகுதி அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள, உருது முஸ்லிம் பள்ளிக்குச் சொந்தமான விளையாட்டுத் திடலை, பெரிய நபர் ஒருவர் ஆக்கிரமித்துவைத்திருக்கிறார்.
 
 
2. வெலிங்டன் ரீடிங் ரூம்' என்பது, வெள்ளைக் காரர்கள் கட்டிய பாரம்பர்யமான கட்டடம். துறைமுகம் தொகுதியின் மையப் பகுதியில் இருக்கும் அதை, ஒரு பாத்திர வியாபாரி ஆக்கிரமித்துவருகிறார். அவர், அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு, லாட்ஜ் கட்ட ஏற்பாடுசெய்கிறார். என் கவனத்துக்கு வந்து அதைத் தடுக்கப் போராடியபோதுதான், அதில் ஒரு மந்திரி உள்பட பலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது
3.முக்கியமாக, என்னுடைய துறைமுகம் தொகுதியில் இருந்துதான் தமிழ்நாடு முழுவதும் பான்பராக், கஞ்சா விநியோகிக்கப்படுகின்றன. எத்தனையோ முறை பலரிடம் முறையிட்டேன்.
 
சென்னை கலெக்டரிடம் போனேன். `எங்கே நடக்கிறது?' எனக் கேட்டார். `உங்கள் ஆபீஸுக்குக் கீழேயே நடக்கிறது' என்றேன். அப்படியே நிலைகுலைந்துபோனார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. //
இந்த ஊடகங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை என்ற ஒன்று இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? குற்றம் சாட்டப்பட்ட ‘பெரிய நபர்-பாத்திர வியாபாரி-மந்திரி-கலெக்டர்’ ஆகியோரை அல்லவா அழைத்து வந்து கேள்வி மேல் கேள்வி கேட்க வேண்டும்? ஏண்டா, ஒருத்தன் திருடு போயிடுச்சுன்னு கம்ப்ளைண்ட் கொடுத்தால், திருடனைப் பிடிப்பீங்களா அல்லது கம்ப்ளைண்ட் கொடுத்தவைப் பிடிப்பீங்களா?
 
 
‘பெரிய நபர்-பாத்திர வியாபாரி-மந்திரி-கலெக்டர்’யாருன்னு கண்டுபிடி. அவங்களை முதல்ல கூப்பிடு. கூடவே புகார் சொன்னவரையும் கூப்பிடு. அப்போ வைங்கடா விவாதத்தை.
 
உண்மையிலேயே இந்த சமூகத்தின் மேல் அக்கறை என்று ஏதாவது இருந்தால், ‘குற்றம் நடந்தது என்ன’ன்னு இந்த மூன்று விஷயத்தையும் அலசி நிகழ்ச்சி நடத்துங்க பாண்டே !
 
 
ஒரு எம்.எல்.ஏ...மக்கள் பிரதிநிதி இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை ஓப்பனா வைக்கிறார். அவர் வைத்த குற்றச்சாட்டை ஆராய்ச்சி செய்வாங்கன்னு பார்த்தால், அவரை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க..
 
News From - http://www.newstig.com/news/4128/Pandey-Question-thanthi-tv
 
 
ஒன்னே ஒன்னு மட்டும் நல்லாத் தெரியுது..ஆயிரம் விஜயகாந்த் வந்து துப்பினாலும், நீ திருந்தவே மாட்ட பாண்டே!

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்