புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை பெற்ற இந்தியாவின் முதல் வாடிக்கையாளர் விஜயகாந்த்!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை பெற்ற இந்தியாவின் முதல் வாடிக்கையாளர் விஜயகாந்த்!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை பெற்ற இந்தியாவின் முதல் வாடிக்கையாளர் விஜயகாந்த்! 
 
புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை பெற்றிருக்கும் இந்தியாவின் முதல் வாடிக்கையாளர் என்ற பெருமையை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெற்றிருக்கிறார். ஆம், விஜயகாந்த் - பிரேமலதா தம்பதியரின் 26வது திருமண நாளுக்காக, அவர்களது மகன்கள் விஜய் பிரபாகர் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர் சேர்ந்து இந்த புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை சமீபத்தில் அவர்களுக்கு பரிசளித்துள்ளனர். இந்த பரிசு விஜயகாந்திற்கு மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜயகாந்த்தின் டேஸ்ட்டை சரியாக புரிந்து கொண்டு இந்த புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை அவரது மகன்கள் பரிசளித்துள்ளனர். இதுபற்றிய சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் பார்க்கலாம்.
 
கடந்த மாதம்தான் இந்தியாவில் இந்த புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், விஜயகாந்த்துக்கு பரிசளிக்கப்பட்டிருப்பது இந்தியாவின் முதல் 2016 ஃபோர்டு எண்டெவர் கார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, விஜயகாந்த்திற்கு எஸ்யூவி வகை வாகனங்கள் மீது விருப்பம் அதிகம். அவர் பயன்படுத்துவது கூட பென்ஸ் எஸ்யூவிதான். எனவே, தனது தந்தையின் விருப்பத்தை சரியாக புரிந்து கொண்டு இந்த புதிய எஸ்யூவி மாடலை பரிசளித்துள்ளனர் அவரது மகன்கள்.
 
சிறப்பான இடவசதி 7 பேர் செல்லும் வசதி கொண்ட ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் இடவசதியும் சிறப்பாக அமைந்திருக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில், அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்வதற்கு இந்த எஸ்யூவியை மாற்றாக பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. ஏனெனில், அவர் பயன்படுத்தும் பென்ஸ் எஸ்யூவி அளவுக்கு இதுவும் சிறப்பான இடவசதியை அளிக்கும்
 
வண்ணம் சன்செட் ரெட் என்ற சிவப்பு வண்ணத்தையே தேர்வு செய்து வாங்கியிருக்கின்றனர். இந்த வண்ணத்தையே ஃபோர்டு நிறுவனம் விளம்பரத்திற்கு அதிகம் பயன்படுத்துகிறது
 
ஆட்டோமேட்டிக் பார்க்கிங் இதுபோன்ற பிரம்மாண்டமான எஸ்யூவி மாடல்களை பார்க்கிங் செய்வது சற்று சிரமமான காரியமாக இருக்கும். எனவே, இந்த காரில் செமி ஆட்டோ பேரலல் பார்க் அசிஸ்ட் ஸ்டீயர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்டீயரிங் கன்ட்ரோலை எடுத்துக் கொண்டு சரியான இடவசதி உள்ள இடத்தை கண்டறிந்து தானாக பாரக்கிங் செய்யும். க்ளட்ச், பிரேக் மற்றும் ஆக்சிலரேட்டர் கன்ட்ரோலை மட்டும் ஓட்டுனர் கவனத்தால் போதுமானது. ரியர் வியூ கேமராவும் உண்டு
 
ஆஃப்ரோடு வல்லமை மிகச் சிறப்பான ஆஃப்ரோடு எஸ்யூவியாகவும் பயன்படுத்த முடியும். இதற்காக, 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருப்பதோடு, டெர்ரெயின் மேனேஜ்மென்ட் சிஸ்டமும் உள்ளது. இந்த எஸ்யூவி 225 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதும் எந்தவொரு சாலையையும் ஒரு கை பார்க்க ஏதுவாகும். புதிய ஃபோர்டு எண்டெவர் 800மிமீ ஆழமான நீர் நிலைகளிலும் செலுத்த முடியும்.
 
டெர்ரெயின் மேனேஜ்மென்ட் சிஸ்டம் எஸ்யூவி தயாரிப்பில் உலகப்பெற்ற லேண்ட்ரோவர் நிறுவனத்தின் தயாரிப்புகள் போல இதில் டெர்ரெயின் மேனேஜ்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக சாதாரண சாலை, சேறு சகதி நிறைந்த சாலை, மலைப்பாங்கான சாலை, பனிபடர்ந்த சாலை மற்றும் மணல்சார்ந்த சாலை என ஒவ்வொரு சாலைக்கும் தக்கவாறு எஞ்சின் இயக்கம், ஸ்டீயரிங் கட்டுப்பாடு போன்றவற்றை மாற்றிக் கொள்ளும் வசதியை அளிக்கிறது.
 
எஞ்சின் புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி 148 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 197 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக கிடைக்கிறது. இரண்டு மாடல்களின் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், 2 வீல் டிரைவ் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கிறது.
 
தொடர்பு வசதி இந்த எஸ்யூவியில் ஃபோர்டு சிங்க்-2 தொடர்பு தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது. இது கார் ஓட்டும்போது போனில் ஹேண்ட்ஸ்ஃப்ரீயாக பேச வழிவகுக்கும். குறுந்தகவல்களை குரல் வழியில் கேட்கவும் பயன்படும். விபத்து ஏற்படும்போது அவசர மையங்களை இந்த தொழில்நுட்பம் தானாக தொடர்பு கொண்டு உதவியை பெறும். அத்துடன் இந்த எஸ்யூவியில் சாட்டிலைட் நேவிகேஷன் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது
 
இதர வசதிகள் நெடுஞ்சாலைகளில் ஓட்டுனர் உதவியில்லாமல் காரை ஒரே சீரான வேகத்தில் செலுத்தும் க்ரூஸ் கன்ட்ரோல், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, மழைய உணர்ந்து இயங்கும் வைப்பர்கள், இருளை உணர்ந்து செயல்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், பானரோமிக் சன் ரூஃப் உள்ளிட்டவை முக்கிய வசதிகளாக இருக்கின்றன.
 
பாதுகாப்பு அம்சங்கள் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன்புறத்திற்கான பார்க்கிங் சென்சார்கள், சக்கரங்கள் வழுக்கி விபத்தை தவிர்க்கும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், வாகனத்தை நிலை தடுமாறாமல் செலுத்தும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரேக் பவரை செலுத்தும் இபிடி., ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 7 ஏர்பேக்குகள் மற்றும் மலை சாலைகளில் ஏறும்போதும், இறங்கும்போது பயன்படும் ஹில் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை புதிய ஃபோர்டு எண்டெவர் பெற்றிருக்கிறது.
 
மைலேஜ் இந்த காரின் 2.2 லிட்டர் 4 வீல் டிரைவ் மாடல் மாடல் லிட்டருக்கு 12.62 கிமீ மைலேஜையும், 2 வீல் டிரைவ் மாடல் 14.12 கிமீ வரை மைலேஜையும் தரும். மற்றொரு, 3.2 லிட்டர் மாடலின் 4 வீல் டிரைவ் மாடல் லிட்டருக்கு 10.91 கிமீ மைலேஜையும், 2 வீல் டிரைவ் மாடல் லிட்டருக்கு 13.50 கிமீ வரை மைலேஜ் தரும் என்றும் ஃபோர்டு தெரிவிக்கிறது.
 
எரிபொருள் டேங்க் அடிக்கடி பெட்ரோல் நிலையங்களில் காத்துக் கிடப்பதை தவிர்க்கும் விதத்தில் 80 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.
 
விலை ஆரம்ப ரக மாடல் ரூ.24.75 லட்சம் முதல் டாப் வேரியண்ட் ரூ.29.46 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ஃபோர்டு எண்டெவர் விற்பனை செய்யப்படுகிறது.
 
இதர கார்கள் டாடா சஃபாரி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவி மாடல்களை அவர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்