4 ஆதாரங்கள் ஃப்ரீடம் 251 ஒரு பெரிய ஏமாத்து வேலை..?

4 ஆதாரங்கள் ஃப்ரீடம் 251 ஒரு பெரிய ஏமாத்து வேலை..?

4 ஆதாரங்கள்  ஃப்ரீடம் 251 ஒரு பெரிய ஏமாத்து வேலை..?
 
யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ரூ. 251 என்ற விலையில் ஒரு ஸ்மார்ட்போன். முதலில் பெரிய அளவிலான ஆச்சரியத்தை ஏற்படுத்திய ரீங்கிங் பெல்ஸ் நிறுவனம் இப்போது குழப்பத்தையும், பல வகையான சந்தேகங்களையும் கிளப்பி உள்ளது. அவ்வாறாக, ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் ஆனது முழுக்க முழுக்க போலியான ஊழல் என்ற செய்தி சமூக வாலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அவைகளில் ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் என்பது ஊழல் தான் என்பதை நிரூபிக்கும் 4 ஆதாரங்களும், ஊழல் இல்லை என்பதை நிரூபிக்கும் 2ஆதாரங்களும் மிக முக்கியமானவைகள் ஆகும்..! 
 
ஊழல் இல்லை - ஆதாரம் 01 : ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது அரசியல்வாதிகள், ஆகையால் அது போலியாக இருக்க வாய்ப்பில்லை.
 
ஊழல் இல்லை - ஆதாரம் 02 : ரீங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் யார் யார் என்பதில் எந்த விதமான ஒளிவுமறைவும் இல்லை, ஆகையால் இது ஊழலாக இருக்க வாய்ப்பில்லை.
 
ஊழல் தான் - ஆதாரம் 01 : ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ல் வெளியான ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போனின் மாதிரி கருவியானது இது ஒரு ஆட்காம் (Adcom) நிறுவன ஸ்மார்ட்போன் என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
 
சந்தேகங்கள் : அதாவது ஆட்காம் கருவிகளை, ஃப்ரீடம் 251 என்ற பெயர் மாற்றம் செய்து மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும், பெரும்பாலான கருவிகளில் ஆட்காம் லோகோ ஆனது வயிட்னர் பூச்சப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது என்றும் சந்தேகங்கள் கிளம்பியுள்ளது.
 
ஊழல் தான் - ஆதாரம் 02 : ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச விளக்கத்தில் ஸ்வட்ச் பாரத், வுமன் சேஃப்டி, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவைகள் ப்ரீ-லோடட் (Pre-Loaded) ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
குற்றச்சாட்டு : ஆனால், விமர்சனம் செய்ய அனுப்பி வைக்கப்பட்ட கருவிகளில் கூறியபடி எந்த விதமான ஆப்ஸ்களும் இல்லை. அதுமட்டுமின்றி வலைதளத்தில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலும், அனுப்பிவைக்கப்பட்ட மாடலும் வித்தியாசமாக உள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
 
ஊழல் தான் - ஆதாரம் 03 : மொபைல் இன்டஸ்ட்ரி பாடி இந்தியன் செல்லுலார் அசோசியேயேஷன் படி (Mobile Industry Body Indian Cellular Association) ஒரு ஸ்மார்ட்போனுக்கு அனைத்து வகையான தள்ளுபடிகளை செய்தாலும் கூட அதன் விலை ரூ. 2700 தாண்டாது என்ற நிலையில் ரூ.251 எப்படி சாத்தியம்..?
 
ஊழல் : அதுவும் 4 இன்ச் டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம், க்வால்காம் 3.1 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் ப்ராஸசர் போன்ற அம்சங்கள் எல்லாம் ரூ.251-க்குள் அடங்கவே முடியாது என்ற நிலையில் இது முழுக்க முழுக்க ஒரு ஊழல் என்று சந்தேகிக்கப்படுகிறது.
 
ஊழல் தான் - ஆதாரம் 04 : இந்திய தர நிர்ணய அமைவனம் தகுதி பட்டியலில் ரீங்கிங் பெல்ஸ் நிறுவனம் இல்லை. அதாவது இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் பொருள் விற்க சான்றிதழ் இல்லை.
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்