துபாய் விமானம் ரஷியாவில் தரையிறங்கியபோது வெடித்துச் சிதறியது: 61 பேர் பலி
தமிழ் உலகம்,
1188
துபாய் விமானம் ரஷியாவில் தரையிறங்கியபோது வெடித்துச் சிதறியது: 61 பேர் பலி
துபாய் நாட்டில் இருந்து ரஷியாவுக்கு சென்ற ‘பிளை துபாய்’ விமானம் ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தடம் எண்:FZ981 கொண்ட, போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த அந்த ஜெட் விமானம், ரஷியா நாட்டின் தென்பகுதியில் உள்ள ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் முதல்முறை தரையிறங்க முயற்சித்தபோது, கடுமையான பனிமூட்டத்தால் ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. எனவே, அந்த முயற்சி கைவிடப்பட்டது.
சற்று நேரத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்தபோதும் இதேநிலை நீடித்ததால், ஓடுபாதையைவிட்டு சுமார் 100 அடிதூரம் விலகி அந்த விமானம் தரையை தொட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சியினால் அந்த விமானம் வெடித்துச் சிதறியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த விமானத்தில் வந்த 55 பயணிகள், விமானி உள்ளிட்ட 6 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 61 பேர் இந்த விபத்தில் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்விபத்தையடுத்து, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.