பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியீடு
பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியீடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 4-ந்தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 6 ஆயிரத்து 650 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை, டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது. மாணவ-மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம். முடிவை தெரிந்துகொள்ளும் இணையதள முகவரிகள் வருமாறு:-
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
10-31 மணிக்கு அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுடன் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்.
மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு 25 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.