எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது

எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது. இதனையடுத்து அதிமுக அரசின் புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும் தற்காலிக சபாநாயகராக முன்னாள் அமைச்சர் செம்மலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர்கள் பட்டியல் விவரம்..

ஜெயலலிதா - முதலமைச்சர், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அவலுவர்கள், காவல் மற்றும் உள்துறை

எம்.ஆர்.விஜயபாஸ்கர்- போக்குவரத்துத் துறை

ஒ.பன்னீர்செல்வம்- நிதித்துறை

திண்டுக்கல் சீனிவாசன்- வனத்துறை

எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணித்துறை

செல்லூர் ராஜூ- தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவுத்துறை

தங்கமணி- மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை

ஜெயக்குமார்- மீன்வளத்துறை

வேலுமணி- உள்ளாட்சித்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கம்

சி.வி.சண்முகம்- சட்டத்துறை

கே.பி.அன்பழகன்- உயர்கல்வித்துறை

வி.சரோஜா- சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத்துறை

கே.வி.கருப்பண்ணன்- சுற்றுச்சூழல் துறை

ஆர். காமராஜ்- உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை

எம்.சி.சம்பத்- தொழில்துறை

ஒ.எஸ்.மணியன்- ஜவுளி மற்றும் கைத்தறி துணி நூல் துறை

உடுமலை ராதாகிருஷ்ணன்- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி

விஜயபாஸ்கர்- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை

எஸ்.பி.சண்முகநாதன் - பால்வளத்துறை

கடம்பூர் ராஜூ - தகவல் மற்றும் விளம்பரத்துறை

ராஜேந்திர பாலாஜி- ஊரகத் தொழில் துறை

வெல்லமண்டி நடராஜன்- சுற்றுலாத்துறை

பெஞ்சமின்- பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டுத்துறை

ஆர்.பி.உதயகுமார்- வருவாய்துறை

மணிகண்டன் - தகவல் தொழில்நட்பம்

ராஜலட்சுமி- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

எஸ்.வளர்மதி- பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன்

துரைக்கண்ணு- வேளாண்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை

கே.சி. வீரமணி- வணிக வரித்துறை

ஜெயலலிதா உள்பட அமைச்சர்கள் 29 பேரும் வரும் மே 23-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு அரங்கில் பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழா நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.
 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்