திரு.தருண் விஜய், நலம் பெற வேண்டி கரூரில் பிரார்த்தனை நடைபெற்றது.
திரு.தருண் விஜய், நலம் பெற வேண்டி கரூரில் பிரார்த்தனை நடைபெற்றது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சமூக நீதிக்கான தனது பயணத்தின் போது கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி டேராடூன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ் ஆர்வலரும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு.தருண் விஜய், நலம் பெற வேண்டி கரூரில், ஞாயிறு மாலை திருக்குறள் முற்றோதல் மற்றும் சர்வசமய பிரார்த்தனை நடைபெற்றது.
திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் , திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பின் (SYT), தேசிய ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ராமசுப்ரமணியன், எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் சாந்தி, பரணி வித்யாலயா முதல்வர் சு.சுதாதேவி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திருக்குறள் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தமிழுக்காகவும் திருக்குறளுக்காகவும் திரு.தருண்விஜய் அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க 'பாராளுமன்றத்தில் திருக்குறள்' நிகழ்வு; திருக்குறள் கருத்துக்களை இந்தியாவில் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக தேசிய அளவில் திருவள்ளுவர் இளைஞர் இயக்கம் கண்டு - அதன் மூலம் பல்வேறு நற்செயல்கள் செய்து வருவது; புது தில்லி குடியரசு தலைவர் மாளிகையில் 133 திருக்குறள் மாணவர்களை பாராட்டி கௌரவித்தமை; மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கிலான இலவச திருக்குறள் புத்தக விநியோகம்; திருவள்ளுவர் & பாரதியார் பிறந்த தினங்களை நாடு முழுதும் உள்ள கல்வி நிறுவனங்களில் கொண்டாட வழி செய்தமை; பாராளுமன்றத்திலும் வட இந்தியாவிலும், உலக அரங்கிலும் திருக்குறள் பெருமையை தொடர்ந்து பேசி வருவது; எத்தனையோ இன்னல்களுக்கு நடுவில் வட இந்தியாவில் உள்ள ஹரித்துவார் நகரில் கங்கைக் கரையில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவ பாடுபட்டு வருவது; உள்ளிட்ட திரு தருண்விஜய் அவர்களின் தமிழுக்கு ஆதரவான தேசிய அளவிலான பங்களிப்புகள் பங்கேற்பாளர்களால் நெகிழ்வோடு நினைவு கூறப்பட்டது.
English:
Tamilnadu Students Pray for Tarun Vijay:
Thirukural Recitation, All Faith Prayer organised at Karur, TN for the well being and recovery of Thiru.Tarun Vijay MP, who is hospitalised in Army hospital, Dehradun, after being brutally attacked during his fight for Social justice and equality for all.
The All Faith Prayer and Thirukural Recitation for Thiru.Tarunvijay was attended by hundreds of young people even on a Sunday.
Thiru.Tarun Vijay was brutally attacked by a group, day before yesterday, during his fight for Social equality and social justice in his home state, Utharkhand.
The gathering at the All Faith Prayer, today, recalled the historic organisation of Thiru.Tarun Vijay's "Thirukkural in Parliament" programme during December 2015, in NewDelhi. 133 Thirukkural students and eminent Tamil Scholars were honoured in the Parliament House New Delhi.
His historic Thirukural programme brought together all the national leaders of all ideologies and political parties on the same stage.
Thiru.Tarun Vijay also enabled the 133 Thirukural Students to get appreciated by the Hon.Predinent of India, in the Rashtrapathi Bhawan, New Delhi.
Thiru.Tarun Vijay is also working hard to install a statue of Tamil Saint Poet Thiruvalluvar in the banks of the river Ganges in Haridwar, Utharkhand.
Thiru.Tarun Vijay is loved by the Tamilnadu People & students for his support and contributions to 'Thirukkural and Tamil' in North India and in the Indian Parliament.
> Thiru.Tarun Vijay has been honoured with 'Ardent Supporter of Tamil Award', Thirukural Ambassador Award, Thirukural Kaavalar Award and many other awards for his contributions to Tamil and Thirukkural, by many popular Tamil Organisations.
Tamil organisations who honoured Thiru.Tarun Vijay include Kaviyarasu Vairamuthu's VETRI Tamizhar Peravai, Karaikudi Kamban Kazhagam, Srilankan Tamil Sangams, Malaysian Tamil Sangam, Washington Tamil Sangam, Singapore Tamil Sangam, etc..
On Sunday (22.05.16) evening, The All Faith Prayer, for Thiru.Tarun Vijay witnessed the presence of 100s of young students, Tamil teachers, M.Kumarasamy College of Education Principal - Prof.Shanthi, Bharani Vidhyalaya Principal- S.Sudhadevi and the Coordinator of Thiruvalluvar Youth Movement (SYT) - Dr.C.Ramasubramanian and many others.
Get well soon, Thiru.Tarun Vijay sir & continue ur fight for social justice.
Our prayers for you.