தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்... இன்றே கடைசி நாள்!
தமிழ் உலகம்,
147
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்... இன்றே கடைசி நாள்!
வேட்புமனு தாக்கல்... இன்றே கடைசி நாள்!
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சிகள் சுயேட்சைகள் களத்தில் குதித்தனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் வேட்புமனு தாக்கல் வழக்கத்தை விட மந்தமாக நடைபெற்றது. எனினும் கடந்த 25-ம் தேதி நல்ல நாள் என்பதால் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏராளமானோர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஒரே நாளில் மாநிலம் முழுவதும் உள்ள தேர்தல் அலுவலகங்கள் பரபரத்தது. இதுவரையில் மாநிலத்தில் 600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். வேட்பாளர் தேர்தல் ஏற்பட்ட தாமதம் காரணமாக, காங்கிரஸ் வேட்பாளர்கள் பலர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.