தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி உயிரிழப்பு!
தமிழ் உலகம்,
200
தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி உயிரிழப்பு!
தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி உயிரிழப்பு!
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் மிக நெருக்கமாக இருந்த தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி, திடீரென தற்கொலைக்கு முயன்றது, அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 24-ம் தேதி, ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டு கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து உடனடியாக அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவையிலுள்ள மருத்துவமனைக்கு கணேசமூர்த்தி மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு எக்மோ கருவி பயன்படுத்தி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை 5:15 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் எம்.பி கணேசமூர்த்தி உயிரிழந்துவிட்டதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.