இது படத்தின் விளம்பரமா? - புகையிலை நிறுவன விளம்பரமா?

இது படத்தின் விளம்பரமா? - புகையிலை நிறுவன விளம்பரமா?

புகையிலைக்கு எதிராக ஒருசாரர் தொடர்ந்து போராடி வருகிறார்கள். மக்களிடம் புகையிலை பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு மெதுவாக அரும்பி வருகிறது. இந்த நேரத்தில் அமிலத்தை ஊற்றுவது போல் சில படங்கள் வெளியாகி புகையிலைக்கு இலவச விளம்பரம் தேடித் தருகின்றன. 
 
தனுஷின் வேலையில்லா பட்டதாரியின் விளம்பரங்களில் பார்த்த போதே, இது படத்திற்கு விளம்பரமா  இல்லை புகையிலைக்கான விளம்பரமா  என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு தனுஷ் சிகரெட்டை ஊதித் தள்ளும் காட்சிதான் நிறைந்திருந்தது. படத்தில் அதைவிட பத்து மடங்கு அதிகம். அதுவும் இறுதியில் எதிரிகளை துவசம் செய்துவிட்டு ரசனையான பாணியில் புகைத்தபடிதான் மெதுவாக  நடப்பார். 
 
சினிமாவையும், தொலைக்காட்சியையும் பார்த்து வளரும் இளைய தலைமுறைக்கு புகைபிடித்தலை நாகரிக குறியீடாக மாற்றுவது இதுபோன்ற படங்களும், நடிகர்களும்தான். இதனை எதிர்த்து தமிழக புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் இயக்கம் மாநில சுகாதாரத்துறையிடமும், படத்துக்கு யு சான்றிதழ் வழங்கிய தணிக்கைத்துறையிடமும் புகார் அளித்துள்ளது. தனுஷ் புகைப்பிடிக்கும் படத்துடன் ஒட்டப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு  அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
சில விசயங்கள் எதிர்ப்பதால் நடைமுறைக்கு வருவதில்லை, நடிப்பவர்கள் திருந்தினால்தான் அது சாத்தியமாகும்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்