மனிதாபிமானம் எங்கே போனது? விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த பிரகாஷ்ராஜ் கேள்வி
மனிதாபிமானம் எங்கே போனது? விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த பிரகாஷ்ராஜ் கேள்வி
பிரகாஷ்ராஜ் ஐதராபத்தில் கிருஷ்ணவம்சி இயக்கும் கோவிந்துரு அந்துருவாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். வீட்டில் இருந்து தன் உதவியாளர்களுடன் படப்பிடிப்புக்கு காரில் சென்றார். அவர் சென்ற கார் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று பிரகாஷ்ராஜின் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் விலை உயர்ந்த காரின் பின்பகுதி பலத்த சேதம் அடைந்தது. பிரகாஷ்ராஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து அவர் வேறொரு வாடகை காரில் ஏறி சென்று விட்டார்.
விபத்து பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் பிரகாஷ்ராஜின் காரையும், பஸ்சையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் படகத்தில் இப்படி எழுதியிருக்கிறார்
"பயங்கரமான விபத்தில் இருந்து தப்பினேன். விபத்து நடந்தபோது ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் வந்த பலர் தூக்கி வீசப்பட்டனர். யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. விபத்தை வேடிக்கை பார்த்தார்கள். அதை பல இளைஞர்கள் தங்கள் செல்போனில் படம்பிடித்தார்கள். இதைப் பார்த்து வெட்கி தலைகுனிந்தேன். உயிர் பிழைத்த பயத்தைவிட இளைஞர்கள் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் இருக்கிறார்களே என்ற பயம்தான் அதிகமாக இருந்தது. நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? நமக்கு என்ன ஆச்சு" என்று எழுதியிருக்கிறார்.
பிரகாஷ்ராஜின் டுவிட்டருக்கு சில இளைஞர்கள் "நீங்க காப்பாற்றாமல் ஏன் சார் அடுத்த கார் பிடிச்சு ஷூட்டிங் போனீங்க?" என்று கமெண்ட் போட்டிருக்கிறார்கள்.