இவர் தான் அசல் இயக்குனர்

இவர் தான் அசல் இயக்குனர்

சென்ற வருடத்தின் பரபரப்பான வெற்றிப்படம் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம். தெலுங்கு, கன்னடத்தில் அதனை மொழிமாற்றம் செய்து அங்கேயும் வெற்றி. விரைவில் கமல் நடிப்பில் தமிழில் மாற்றம் செய்யப்படுகிறது. ஒரு படம் பல மொழிகளில் ஒரேவிதமான வரவேற்பை பெறுவது அபூர்வம்.
இந்தப் படத்தை மம்முட்டியை வைத்து பண்ணலாம் என்று அவரை அணுகினார் ஜீத்து ஜோசப். கதையை கேட்ட மம்முட்டிக்கு நாம் சரிவர மாட்டோம் என்று தோன்ற, மன்னிக்கவும் முடியாது என்றிருக்கிறார். ஜீத்து ஜோசப்பின் அடுத்த சாய்ஸ் மோகன்லால். அவரும் முடியாது என்றால் ஜெயராமை வைத்து எடுப்பது என்ற முடிவுடன், மோகன்லாலை பார்க்கப் போவதற்கு அடுத்த நாள் ஜெயராமிடமும் நேரம் வாங்கியுள்ளார்.
 
மோகன்லாலை சந்திக்க அவரது மேலாளர் அவ்வளவு எளிதில் அனுமதிக்கவில்லை. புதிய படமாட? 2017 வரை அய்யவின் அட்டவணை காலி என்றிருக்கிறார். சரி, அவரைப் பார்த்து கதையை மட்டும் சொல்றேன் என்றிருக்கிறார் ஜீத்து ஜோசப். எந்த கதையா இருந்தாலும் 2017 -க்குப் பிறகுதான் என்று பிடிவாதமாக இருந்துள்ளார் மேலாளர். ஜீத்து ஜோசப்பின் பொறுமை கழன்றது.
 
நான் ஒரு இயக்குனர். மோகன்லாலை பார்த்து கதை சொல்ல வந்திருக்கேன். அவர் 2017 ல் படம் பண்றதா இருந்தால் அதுவரை கதிருக்கிறதா வேண்டாமான்னு தீர்மானிக்க வேண்டியது நான். கதையே சொல்லக் கூடாதுன்னு தடுக்க நீ யார்....? ஜீத்து ஜோசப்பின் சத்தம் கேட்டு வெளியே வந்திருக்கிறார் மோகன்லால். ஜீத்து ஜோசப் விவரத்தை சொல்ல அங்கேயே கதை கேட்டிருக்கிறார்.
 
கதை முடிந்ததும் மேனேஜரை அழைத்த மோகன்லால், தனது அனைத்து மற்ற ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்க சொல்லிவிட்டு, நாம் முதலில் பண்ணப் போறது ஜீத்துவோட படம் என்றிருக்கிறார்.
 
தனது கதையின் மீதிருந்த நம்பிக்கைதான் ஜீத்து ஜோசப்பை சத்தம் போட வைத்தது. இயக்குனர்களுக்கு தேவை இப்போது இந்த தில்தான்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்