கார் பந்தயத்தில் கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்திய ஜெய்
கார் பந்தயத்தில் கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்திய ஜெய்
சுற்றிலும் கார்கள் விர்ரென்று பறந்து ஓடும் இருங்காட்டுக் கோட்டையில் நடிகர் ஜெய்யைப் பார்ப்பவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. பந்தைய காரிலிருந்து காற்றில் முடிகள் பறக்க இறங்கி வந்த ஜெய்யை அனைவரும் வியப்புடன் பார்த்தார்கள். இது நடிகர் ஜெய் தானா? அல்லது அவர்போல இருக்கும் இன்னொருவரா? என்று குழப்பம். அவர்களுக்கு அவர் நடிகர் ஜெய்தான் என்பது உறுதி ஆனதும் ஆச்சர்யம் தாங்கவில்லை.
படங்களில் பெரும்பாலும் பயந்த சுபாவமுள்ள வேடங்களில் வரும் ஜெய், இப்படி கார் பந்தய வீரராக வந்து நின்றதை பார்த்தவர்களால் நம்பத்தான் முடியவில்லை. ஆனால் ஜெய் சினிமாவில் 'சென்னை 600 028' படத்தில் ஒரு கிரிக்கெட் வீரராகத்தான் அறிமுகம் ஆனார். ஜெய் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவரும்கூட, ஜெய்க்கு கார் பந்தய கனவு சிறுவயதிலிருந்தே உண்டு. 12 வயதிலிருந்து விரிந்த கனவு நடிகர் அஜீத் கார் பந்தய வீரராக பிரபலமானதும் வலுப்பட்டது.
எனக்கு தூண்டுதலும் பெரிய நம்பிக்கையும் அஜீத் சார்தான். அவர் கார்பந்தயங்களிலும் நடிப்பிலும் பேசப்பட்டு பிரபலமானவர் என்கிறார் ஜெய். அண்மையில் இருகாட்டுக்கோட்டையில் நடந்த கார் பந்தயத்தில் 5 சுற்றுக்களில் தன் திறமையை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு சுற்றும் சுமார் 2 கி.மீ கொண்டது.
இவர் எல்லாம் கார் பந்தயத்துக்கு வந்தால் அஜீத் ஆக முடியுமா என்ற முனு முனுப்பையும் எதிர் கொண்டவராகத் கூரும் ஜெய், அஜீத் ஒரு லீடர், சிறந்த லீடர் மேலும் பல லீடர்களைத்தான் உருவாக்குவார்கள். பின்பற்றுவர்களை அல்ல. என்று நம்பும் ஜெய், பார்முலா பந்தயங்களுக்குத் தயாராகிறார். அதற்கு தகுதியான அனுவங்களையும் பயிற்சிகளையும் பெறவேண்டும். நுட்பங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அடக்கமாக.
அஜீத்தை போலவே நடிப்பிலும் ரேஸிலும் கவனம் செலுத்த விரும்புகிறார் ஜெய்.