திரைத்துறையில் அதிகம் சம்பளம் வாங்குகிறவர்கள் எல்லாம் அதிகம் உழைப்பவர்கள் இல்லை - விஜய் ஆண்டனி பளீர் பேச்சு

திரைத்துறையில் அதிகம் சம்பளம் வாங்குகிறவர்கள் எல்லாம் அதிகம் உழைப்பவர்கள் இல்லை - விஜய் ஆண்டனி பளீர் பேச்சு

திறந்த புத்தகம் என்பார்களே அப்படியிருக்கிறார் விஜய் ஆண்டனி. முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் போதே, இனி நான் நடிப்புக்குதான் முக்கியத்துவம் தரப்போறேன் என்று சொல்வதற்கும், படங்களை தொடர்ந்து தயாரிப்பதற்கும் நெஞ்சுரம் வேண்டும். இன்று (29-08-14) அவரது சலீம் திரைப்படம் வெளியாகியுள்ளது. அதை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறிய பளிச் வார்த்தைகள் உங்களுக்காக.

சினிமா அனுபவம் எப்படி இருக்கு?
 
வீட்டை கட்டிப் பாரு, கல்யாணத்தை செஞ்சிப் பாருன்னு எல்லாம் சொல்வாங்க. அதெல்லாம் சுலபம். சினிமா எடுக்கிறதுதான் ரொம்ப கடினம். இசையமைப்பாளர் ஆக இருந்தவரைக்கும் சுலபமான வேலை. இயக்குனர் வந்து சூழ்நிலையை  சொல்வாங்க, மெட்டு  கேப்பாங்க கொடுப்பேன். ஆனா சினிமாவில் வெயிலிலும், மழையிலும் ஒவ்வொருத்தரும் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு இப்போதான் தெரிஞ்சுகிட்டேன். நான் சொல்றது இயக்குனர், ஒளிப்பதிவாளர், லைட்மேன் இவங்களைப் பற்றி. நாயகனுக்கு குடை பிடிச்சிப்பாங்க. நாயகிக்கும்  அந்த மாதிரிதான். கேரவன் எல்லாம் இருக்கும். ஆனா தொழில்நுட்ப வல்லுனர்கள்  இருக்கிறாங்க பாருங்க. நாய் படாதபாடு. சினிமாவில் ரொம்ப அதிகமாக சம்பாதிச்சவங்க ரொம்ப கஷ்டப்படுறவங்க கிடையாது. இசைஅமைப்பாளர்கள் கூட.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்