மைக்ரோசாப்ட் நிறுவன தேர்வில் வென்று சாதித்த 5 வயதுச் சிறுவன்

மைக்ரோசாப்ட் நிறுவன தேர்வில் வென்று சாதித்த 5 வயதுச் சிறுவன்

மைக்ரோசாப்ட் நிறுவன தேர்வில் வென்று சாதித்த 5 வயதுச் சிறுவன்

மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய, கம்ப்யூட்டர் தேர்வில், 5 வயது பிரிட்டன் சிறுவன் பாஸ் செய்து சாதனை படைத்து உள்ளான்.

லண்டனின் கோ வென்ட்ரி பகுதியில் வசிக்கும், 5 வயது சிறுவன், அயான் குரேஷி. தற்போது அவன், கம்ப்யூட்டர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ், 8.1 தேர்வெழுதி பாஸ் செய்து உள்ளான்.

இதுகுறித்து, அவனது தந்தை ஆசிம் கூறியதாவது:
அயானுக்கு, மூன்று வயது முதல், கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டது.

தற்போது வீட்டில், அவனுக்கு என்று தனியாக இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் லேப் உள்ளது.

அதில், தினமும் இரண்டு மணிநேரம், பயிற்சி செய்து வருகிறான். பொதுவாக, பட்டதாரிகளுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்தும் கம்ப்யூட்டர் தேர்வில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை.

சிறப்பு அனுமதி:
ஆனால், சிறப்பு அனுமதி பெற்று தேர்வு எழுதியதுடன், இரண்டரை மணி நேரத்திற்குள் தேர்வு எழுதி முடித்து, பாஸ் செய்து சாதனை படைத்துள்ளான்.

மிகக் குறைந்த வயதில், ‘மைக்ரோசாப்ட் சர்ட்டிபைட் புரபஷனல்’ சான்றிதழ் பெற்றுவிட்டான். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்