செயற்கை மணலின் அவசியம்

செயற்கை மணலின் அவசியம்

செயற்கை மணலின் அவசியம்

கட்டுமான பொருட்களின் விலை உயர்வு கட்டுமான பணிக்கான பட்ஜெட் தொகையை உயர செய்துவிடுகிறது. கட்டுமான பணி பாதி அளவு நிறைவடைந்திருக்கும் நிலையில் பலரும் பட்ஜெட் தொகையை கணக்கிட்டு பார்க்கும்போது அது திட்டமிட்டிருக்கும் தொகையை விட ஏறுமுகமாக இருக்கிறது. மீதி தொகையில் கட்டுமான பணியை முடிப்பது சிக்கலான விஷயமாக இருக்கிறது. 

அதற்கு கட்டுமான பொருட் கள் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் உயர்ந்து வருவது முக்கிய காரணமாக இருக்கிறது. அதிலும் கட்டுமான பணியில் முக்கிய அங்கம்  வகிக்கும் மணல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் சூழல்தான் நிலவுகிறது. சில இடங்களில் மணல் தட்டுப்பாடும் நிலவுகிறது. அது மணல் விலை ஏற்றத்துக்கு காரணமாக இருப்பதுடன் கட்டுமான பணியையும் பாதிப்படைய செய்கிறது. இதனால் திட்டமிட்டபடி கட்டுமானத்தை தொடர முடியாத சூழல் நிலவுகிறது.  அதுவும் பட்ஜெட் தொகை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது. மணல் தட்டுப்பாடு, மணல் விலையேற்றம் ஆகிய பிரச்சினைக்கு மாற்று தீர்வாக அமைந்திருக்கிறது  செயற்கை மணல். 

 இந்த மணல் ஆற்று மணலுக்கு மாற்றாக கருதப்படுகிறது. கல் உடைக்கும் குவாரிகளில் வீணாகும் மண் துகள்கள்தான் இந்த செயற்கை மணல். அந்த மண் துகள்களை கொண்டு செயற்கை மணலை தயாரிக்கிறார்கள். இது மணல் தட்டுப்பாட்டை குறைப்பதுடன் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும் உதவுகிறது. அதேவேளையில் ஆற்று மணலுக்கு நிகரான தரத்துடன் இந்த செயற்கை மணல் தயாரிக்கப்படுகிறது. இந்த மணலை பயன்படுத்தும்போது சிமெண்ட் பயன்பாடும் குறைய வாய்ப்பிருக்கிறது. அத்துடன் ஆற்றுமணலை சலித்து பயன்படுத்தும்போது குறிப்பிட்ட அளவு கழிவுகள் வெளியேறும். 

ஆனால் செயற்கை மணலில் அந்த பிரச்சினை ஏற்படுவதில்லை. இந்த மணல் தட்டுப்பாடின்றி கிடைப்பதால் கட்டுமான பணிக்கு தொய்வு ஏற்பட வாய்ப்பில்லை. வெளிநாடுகள், மற்ற மாநிலங்களில் இந்த  மணலை பயன்படுத்தி நிறைய கட்டுமானங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இந்த மணலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து  கொண்டிருப்பதாக கட்டுமான நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்