அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக வந்து அஞ்சலி

அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக வந்து அஞ்சலி

கலாம் விதைக்கப்பட்ட இடத்தை வணங்க தடுப்புகளை உடைத்து குவிந்த மக்கள்

ராமேஸ்வரம்: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக வந்து அஞ்சலி செலுத்தியபடி உள்ளனர். போலீஸ் தடுப்புகளை உடைத்து விட்டு மக்கள் குவிந்து வருவதால் போலீஸாரும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு விலகி விட்டனர்.

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இருந்த வரை போலீஸார் மக்களை கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் நெருங்க விடவில்லை. ஆனால் தலைவர்கள் சென்ற பின்னர் மக்கள் பொறுமை இழந்தனர். போலீஸாரின் தடுப்புகளையும் மீறி உள்ளே புகுந்து விட்டனர். தற்போது கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று அதை தொட்டு வணங்கியும், பூக்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாலாபுறங்களிலிருந்தும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருவது நெகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது. தொடர்ந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்