சிறிய மாநிலம்.. பெரிய சாதனை! - SIKKIM BECOMES FIRST ORGANIC STATE OF INDIA!
சிறிய மாநிலம்.. பெரிய சாதனை!
நாட்டின் முதலாவது நஞ்சில்லாத விவசாய பூமியானது சிக்கிம்!
SIKKIM BECOMES FIRST ORGANIC STATE OF INDIA!
சிக்கிம் மாநிலத்தில் உள்ள 75,000 ஹெக்டேர் நிலமும் ரசாயன நஞ்சில்லாத விவசாய பூமியாக மாற்றப்பட்டுவிட்டது.2003 ஆம் ஆண்டில் சிக்கிம் சட்டப் பேரவை ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை இயற்றியது. சிக்கிம் மாநிலத்தை நஞ்சில்லாத விவசாய மாநிலமாக மாற்றுவோம் என்ற தீர்மானம்தான் அது.ஒரு மாநிலத்தில் தொடர்ச்சியாக 5 முறை முதல்வர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான பவன் குமார் சாம்லிங்தான் இதன் பின்னணி.முதலில் நஞ்சு பரப்பும் பரப்பும் ரசாயன விவசாயத்தின் தீமைகள் குறித்தும், இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு உருவாக்கப் பட்டது.இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்க பயிற்சியும் உதவிகளும் அளிக்கப்பட்டன. பின்னர் பூச்சி மருந்து மற்றும் ரசாயன உர விற்பனை தடை செய்யப் பட்டது. அவற்றை விற்பவர்களுக்குஒரு லட்சம் ரூபாய் அபராதமும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அறிவிக்கப் பட்டது.எல்லோரும் இயற்கை வழி விவசாயத்துக்கு மாறிவிட்டனர். இயற்கை முறைவிளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்க அரசே ஏற்பாடுகள் செய்துள்ளது. எல்லா இடங்களிலும் நஞ்சில்லாத உணவு கிடைப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் தேடிவரும் மாநிலமாக சிக்கிம் மாறி வருகிறது.சிறிய மாநிலம்.. பெரிய சாதனை!