சுதந்திரதின ஸ்பெஷல்: லிங்கா, காக்கிச்சட்டை, சிங்கம் 2

சுதந்திரதின ஸ்பெஷல்: லிங்கா, காக்கிச்சட்டை, சிங்கம் 2

சுதந்திரதின ஸ்பெஷல்: லிங்கா, காக்கிச்சட்டை, சிங்கம் 2

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. ஜெயாடிவியில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படமும், சன்டிவியில் சிவகார்த்திக்கேயன் நடித்த காக்கிக்சட்டை திரைப்படமும் ஒளிபரப்பாகும் என ஒருவாரமாகவே முன்னோட்டங்கள் போட ஆரம்பித்து விட்டனர். சுதந்திரதினம் என்றாலே கொண்டாட்டத்திற்கு பஞ்சமிருக்காது. பள்ளிகளில் கொடியேற்றிவிட்டு வாங்கிய மிட்டாயை சுவைத்துக்கொண்டே ஊர்வலம் போனது அனைவரின் நினைவில் இருக்கும். இன்றைக்கு ஊர்வலம் போகிறார்களோ இல்லையோ காலையில் சீக்கிரமே கொடியேற்றி கொண்டாடிவிட்டு தொலைக்காட்சி முன்பு அமர்ந்து விடுகின்றனர். சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பின்னர் சுதந்திர தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதே பெரும்பாலோனோருக்கு முக்கிய வேலையாகி விட்டது.


 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்