நீரிலும் நிலத்திலும் ஓடக்கூடிய பைக் தயாரித்த ஆஸ்திரேலியா வாலிபர்

நீரிலும் நிலத்திலும் ஓடக்கூடிய பைக் தயாரித்த ஆஸ்திரேலியா வாலிபர்

நீரிலும் நிலத்திலும் ஓடக்கூடிய பைக் தயாரித்த ஆஸ்திரேலியா வாலிபர்

 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பைக் ரேசர் ரோப்பி மாட்டிசன் நீரிலும் நிலத்திலும் ஒரு பைக்கை ஓடக்கூடிய  தயார் செய்து அதை ஓட்டியும் சாதனை புரிந்து உள்ளார்.  34 வயதாகும்  சினிமா பைட்டரான மாட்டிசன் கேடிஎம் 350 சிசி  நீரிலும் நிலத்திலும் செல்லும்   டர்ட் பைக்கால் இந்த சாதனி புரிந்து உள்ளார்.

2 வருடங்கள் மிக சிரமப்பட்டு இந்த சாதனையை அவர் புரிந்து உள்ளார்.இதற்காக வீடியோ டிரைலர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அதற்கு கனவுக்கு பின்னால் (Behind the Dream) என பெயரிட்டு உள்ளார்

இதற்கு முன்னால் மாட்டோ என்கிற மாட்டிசன் பல் வேறு சாதனைகளை புரிந்து உள்ளார். பாரீஸ்  லாஸ் வேகாஸ் ஓட்டலின் 96 வது அடி உயரத்தில் இருந்து பைக் மூலம் குதித்து உள்ளார். கிரிஸில் உள்ள 280 அடி அகலம் உள்ள கொரிந்த் கால்வாயை  பைக் மூலம்  தாண்டி சாதனை  செய்து உள்ளார்.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்