கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (29.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மீ.தங்கவேல்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (29.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மீ.தங்கவேல்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (29.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மீ.தங்கவேல்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
 
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து தெரிவித்ததாவது,
 
இக்கூட்டத்தில். விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை வழங்கியதில் கரூர் மாவட்டம் ஊனம்பட்டி பகுதியைச் சார்ந்த விவசாயி கால்நடை துறை சார்பாக கால்நடைகளுக்கு முகம் நடத்துவது குறித்தும், தென்னிலை பகுதியில் பட்டா மாற்றம் மற்றும் உயர் மின் கோபுரம் அமைத்து தருவது குறித்தும், அதே பகுதியில் விவசாயிகளுக்கு விவசாய நிலங்களில் பட்டா மற்றும் உட்பிரிவு செய்து தருவது குறித்தும், புகளுர் பகுதியில் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு எடுத்து தருவது குறித்தும், அரவக்குறிச்சி பகுதி பெரிய மஞ்சுவெளி பகுதியில் நீர் பாசனம் மற்றும் இடது புறமாக வாய்க்கால் தூர்வாரி கொடுப்பது குறித்தும், குன்னி காட்டுயூர் பகுதியில் விவசாயிகளுக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்து கொடுத்தை குறித்தும், பனிக்கம்பட்டி மருதூர் பகுதியில் விவசாயிகளுக்கு நில அளவீடு செய்து கொடுப்பது குறித்தும், அதே பகுதியில் விவசாயிகளுக்கு விவசாய நிலங்களுக்கு தனிப்பட்ட வழங்க ஏற்பாடு செய்வது குறித்தும். ராயனூர் பகுதியில் வாசனை வாய்க்கால் இருபுறமும் தூர்வாரி கொடுப்பது குறித்தும், குளித்தலை பகுதியில் அய்யர்மலை முதல் திம்மம்பட்டி வரை செல்லும் சாலையில் பள்ளி எதிரே பெரிய வேகத்தடை உள்ளதை சரி செய்து சிறிய வேக தடையாக அமைத்து தருவது குறித்தும், குளித்தலை பகுதி மருதூர் விவசாயிகளுக்கு நில பாசன வாய்க்கால் தூர்வாரி கொடுப்பது குறித்தும், அதே பகுதியில் மயானத்திற்கு செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகளை எடுத்து தருவது குறித்தும், தோகைமலை பகுதியில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்தும், உள்வீரராக்கியம் பகுதியில் பொதுமக்களுக்கு தினசரி 100 நாள் வேலை ஏற்படுத்தி தருவது குறித்தும், கடவூர் பகுதியில் விவசாய நிலங்கள் முறையாக விரைவாகவும் அளவீடு செய்து தருவது குறித்தும் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவது குறித்தும், கரூர் அமராவதி ஆற்றின் இருப்பகுதியிலும் பாசன வாய்க்கால்களை தூர்வாரி கொடுப்பது குறித்தும், கரூர் பகுதியில் விவசாயிகளுக்கு நில அளவீடு கணினியில் மாற்றம் செய்து தருவது குறித்தும், கடவூர் பகுதியில் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு மோட்டார் சரி செய்து குடிநீர் வழங்குவது குறித்தும், என்.புதுப்பாளையம் பகுதியில் சிறப்பு நிதி வழங்கி ஆழ்துளை கிணறு சரி செய்து தருவது குறித்தும், நங்கவரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை கட்டிடம் அமைத்து தருவது குறித்தும், வளையல்காரன் புதூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் செய்து கொடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தும், காரணாம்பட்டி கிராமத்தில் மயான சாலை புதிய சாலையாக அமைத்து தருவது குறித்தும், கரூர் மாவட்டம் மொஞ்சனூர் பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலுக்கு செல்வதற்கு தினசரி புதிய பேருந்து வழித்தடம் ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும், ஆண்டிபாளையம் பகுதியில் பழுதடைந்த சாலைகளை புதுப்பித்து தருவது குறித்தும், அரவக்குறிச்சி ஈசநத்தம் முதல் முத்துகவுண்டனூர் வரை செல்லும் சாலையினை புதிய சாலையாக அமைத்து தருவது குறித்தும், கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் வியாபாரிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமரா அமைத்து தருவது குறித்தும், கோரிக்கைகள் வரப்பெற்றது இக்கோரிக்கையினை உடனடியாக செய்து கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மீ.தங்கவேல் இ.ஆ.ப..அவர்கள் அறிவுரித்தினார்கள்.
விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்தில் இன்று வேளாண்மை துறை சார்பில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1 நபருக்கு தார்ப்பாயும், வேளாண் இயந்திர மயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு சுழல் கலப்பையும்,தோட்டக்கலைத்துறை சார்பில் 1 நபருக்கு வாழையில் ஊடு பயிர் சாகுபடி மானியமும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் 121 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம. கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் நிலம் திருமதி.கவிதா, இணை இயக்குனர் வேளாண்மை துறை திரு.ரவிசந்தரன், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு. முகமது பைசல் (கரூர்) திரு.ரவி.(குளித்தலை). தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.சைபுதீன். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி உமா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பல கலந்து கொண்டனர்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்