"நீங்கள் நலமா?" திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

"நீங்கள் நலமா?" திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

"நீங்கள் நலமா?" திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
 
தமிழக அரசு பல நலத்திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வருகிறது. அதன்படி அரசின் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது மக்களுடன் நேரடி தொடர்புகொண்டு நிறைவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 
மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, உங்கள் ஊரில் கலெக்டர் என்பது போல, மக்களுக்கான திட்டங்களின் பலன்கள் அவர்களுக்கு போய் சேர்கிறதா? என்பதை உறுதி செய்யும் வகையில், "நீங்கள் நலமா?" என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று (புதன்கிழமை) தொடங்கிவைக்கிறார்.
 
நீங்கள் நலமா? திட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் என அனைத்து அதிகாரிகளும் பொதுமக்களோடு, அவர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நீங்கள் நலமா?" என்று கேட்டு, அரசின் நலத்திட்டங்கள், அரசால் நிறைவேற்றப்படும் சேவைகள் பற்றியும், அது வந்து சேர்கிறதா? என்பது உள்பட கருத்துகளை கேட்கப்போகிறார்கள்.
 
நீங்கள் நலமா? திட்டத்தின் மூலம் நேரடியாக முதல்-அமைச்சரே பொதுமக்களிடம் தொடர்புகொள்வது, அரசு அதிகாரிகளையும் தொடர்புகொள்ள வைக்கும். எந்த திட்டத்திலும் முறைகேடு நடக்காமல், அனைத்து ஓட்டைகளையும் அடைக்க வைக்கவும், அனைத்து பலன்களும் மக்களுக்கு நேரடியாக போய் சேரவும் இந்த திட்டம் உதவியாக இருக்கும்.
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்