அட்டகாசமான ரெஸ்யூம்: இன்டர்வியூ இல்லாமல் லண்டனில் வேலை பெற்ற பெங்களூர் இளைஞர்

அட்டகாசமான ரெஸ்யூம்: இன்டர்வியூ இல்லாமல் லண்டனில் வேலை பெற்ற பெங்களூர் இளைஞர்

அட்டகாசமான ரெஸ்யூம்: இன்டர்வியூ இல்லாமல் லண்டனில் வேலை பெற்ற பெங்களூர் இளைஞர்

அட்டகாசமான, படைப்பாற்றல் மிக்க ரெஸ்யூம் மூலம் இன்டர்வியூ இல்லாமல் லண்டனில் வேலை பெற்றுள்ளார் பெங்களூரை சேர்ந்த சுமுக் மேத்தா என்ற 21 வயது இளைஞர்.

பெங்களூர்:

பெங்களூரை சேர்ந்த மேலாண்மை பட்டதாரியான சுமுக் மேத்தா(21), லண்டனை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஜி.கியு. இதழில் பணிபுரிய ஆசைப்பட்டுள்ளார். ஜி.கியு. இதழ் ஆண்களுக்கான பிரத்யேக இதழ் ஆகும். இந்த இதழில் வேலை கிடைப்பது மிகவும் கடினம் என்பதால், வித்தியாசமான, படைப்பாற்றல் மிக்க ரெஸ்யூம் ஒன்றை தயார் செய்ய முடிவு செய்தார்.

இதன்படி ஜி.கியு. இதழ் போன்று தன்னுடைய 20 பக்க ரெஸ்யூமை வடிவமைத்தார். இதற்கென எடுக்கப்பட்ட சிறப்பு புகைப்படங்கள், கிராபிக்ஸ் என ஏகப்பட்ட பணம் செலவழித்து, 3 வாரம் கடினமாக உழைத்துள்ளார். 20 பக்க ரெஸ்யூமில் தனது படிப்பு, அனுபவம், இதுவரை சாதித்தவை, பொழுது போக்கு போன்றவற்றை ஜி.கியு. போலவே வடிவமைத்துள்ளார். சாதாரணமாக பார்க்கும் போது அது ரெஸ்யூம் என்று தோன்றாது, மாறாக ஒரு ஜி.கியு. இதழ் என்றே நினைக்கத் தோன்றும் அளவுக்கு அதை கச்சிதமாக உருக்கியுள்ளார்.



சுமுக் மேத்தாவின் இந்த உழைப்பு வீண் போகவில்லை. லண்டனில் இருக்கும் ஜி.கியு. இதழ் ஆசிரியர் மேத்தாவின் ரெஸ்யூமை பார்த்து அசந்துவிட்டார். இதனால் மேத்தாவிடம் நேர்முகத் தேர்வு கூட நடத்தாமல் நேரடியாக அவரை வேலைக்கு எடுத்துக்கொண்டார், அதுவும் லண்டனில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு...


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்