மும்பை பள்ளி மாணவி எழுதிய கடிதத்தை பாராட்டி பிரதமர் பதில் கடிதம்

மும்பை பள்ளி மாணவி எழுதிய கடிதத்தை பாராட்டி பிரதமர் பதில் கடிதம்

மும்பை பள்ளி மாணவி எழுதிய கடிதத்தை பாராட்டி பிரதமர் பதில் கடிதம்

மும்பை: மும்பையை சேர்ந்த ஐஸ்வர்யா கங்கே என்ற மாணவி, பிரதமர் நரேந்திமோடிக்கு கடிதம் அனுப்பிய பின், அவரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்றுள்ளார். இந்த 16 வயதுடைய பெண், அவர் கையால் எழுதப்பட்ட கடிதத்திற்கும் மற்றும் பிரச்சனைகளை உயர்த்தி காட்டியதற்கும் பாராட்டி பிரதமரிடமிருந்து பதில் கடிதம் பெற்றது ஆச்சரியமாக இருக்கிறது.

'நான் எந்த பதிலும் எதிர்பார்த்து அவருக்கு கடிதம் எழுதிவில்லை, என்னுடைய வாழ்க்கையில் நாளுக்கு நாள் நடக்கும் பிரச்சனைகளை பார்த்து, அவற்றிள் முக்கியமானதை அவரது கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன். பிரதமரிடமிருந்து என்னுடைய முகவரியில் வீட்டுக்கு கடிதம் வந்த போது என்னால் நம்ப முடியவில்லை' என்று கண்டிவ்ளியில் உள்ள கேஇஎஸ் ஷெராப் கல்லூரியில் மேல்நிலைப்பள்ளி படிக்கின்ற மாணவி ஐஸ்வர்யா கங்கே கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் பதவியை எடுத்துக் கொள்ளும் முன் நீண்டகாலமாக நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி வந்தேன். 'அவர் எப்போதும் நிலையாக உள்ளவர் மற்றும் அவரால் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன். நான் ஒவ்வொரு குடிமகனின் உள்கட்டமைப்பு, கல்வி, உணவு மற்றும் தங்குமிடம் தொடர்பான பிரச்சினைகள் உயர்த்திக்காட்டி அவருக்கு பலமுறை கடிதம் எழுதியிருக்கின்றேன்'. என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யாவின் கடிதத்திறகு மோடி மட்டும் பதில் கடிதம் அனுப்பவில்லை, ஆனந்டிபேன் படேல் குஜராத் முதல் பெண் முதல்வராக பதவியேற்ற பின், முதல்வர் பதவியை பாராட்டியும் மற்றும் அவர் மக்களுக்கு செய்த வேலையை பாராட்டியும் ஐஸ்வர்யா கடிதம் எழுதியுள்ளார். அவரின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து முதல்வரும் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

என்னுடைய பரிந்துரைகள் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்காது என்பது எனக்கு தெரியும், ஆனால் எனது கடிதங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது என்றும் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதுக்கும் மற்றும் சுனாமியால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்ட போது ஜப்பனீஸ் பிரதம மந்திரி நாவோடோ கான்விற்கும் ஐஸ்வர்யா கடிதம் எழுதியுள்ளார்.

ஐஸ்வர்யாவிடம் மகாராஷ்டிராவில் ஏன் எந்த தலைவர்களுக்கும் கடிதம் எழுதவில்லை என்று கேட்ட போது, அவர், 'என் மாநில தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை' என்று கூறினார். ஏனெனில், ஐஸ்வர்யாவின் குடும்பம் அரசாங்கத்தால் எந்த பயன்களும் பெறவிலை என்று தெரியவந்தது.
 
ஐஸ்வர்யாவின் தந்தை, பாரத் கான்கேவின் பெற்றோர் அவுரங்காபாத்தில் அவர்களது சொந்த ஊருக்கு திரும்புவதற்கு முன் மும்பையில் 70 ஆண்டுகள் வசித்தவர்கள். இவர்கள் ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு மாநிலத்தின் பல்வேறு துறைகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். 'நான் பழங்குடியினரை சேர்ந்தவராக இருப்பதால் அரசாங்கத்திடம் இருந்து எந்த உரிமையும் எனக்கு கிடைக்கவில்லை'. என்று பாரத் கான்கே கூறியுள்ளார். மேலும், அவர் மூன்று மாநில முதலமைச்சர்களுக்கு 100 கடிதங்களை எழுதியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்