தமிழ சட்டப்பேரவையை கலக்கிய வீதி என் 110 | கரூருக்கு வரும் மருத்துவ கல்லூரி!

தமிழ சட்டப்பேரவையை கலக்கிய வீதி என் 110 | கரூருக்கு வரும் மருத்துவ கல்லூரி!

இன்று நடந்து முடிந்த தமிழக சட்டபேரவை கூட்டுத்தொடரை வீதி என் 110 ஒரு கலக்கு கலக்கியது. இந்த கூட்டுத்தொடரில் மொத்தம் 41 அறிவுப்புகள் இந்த வீதியின் அறிவிக்கபட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையின் முக்கிய அம்சம்

1)அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், தனியார் அமைப்புகளுடன் இணைந்து டயாலிசிஸ், டயாக்னோசிஸ், டயாபிடிஸ் மையங்கள் நிறுவப்படும்.

இந்த மையங்களில் கூடுதலாக எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன்கள் நிறுவப்படும்.

2) சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு 50 கோடி ரூபாய் செலவில் அடுக்கு மாடிக் கட்டடம் கட்டப்படும்.

3) 10 வட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் 25 கோடி ரூபாய் செலவில் வட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.

4) அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத 15 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளை மேம்படுத்த 97 கோடியே 40 லட்சம் ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5) தமிழ்நாட்டில் தற்போது 17 மாவட்டங்களில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் எந்த ஒரு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியும் இல்லாததைக் கருத்தில் கொண்டு, கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும், மாணவ, மாணவியரும் பயன்பெறும் வகையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

6) அரசு மருத்துவமனைகளுக்கு 40 கோடி ரூபாய் செலவில் எதிர் சவ்வூடு பரவல் தண்ணீர் உபகரணம் நிறுவப்படும்.

7) 12 அரசு மருத்துவமனைகளுக்கு எக்ஸ்ரே படத்தை பாதுகாத்து அனுப்பும் வசதியுடன் கூடிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் 13 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். 31 அரசு மருத்துவமனைகளுக்கு எக்ஸ்ரே கருவி மற்றும் முடநீக்கியல் அறுவை சிகிச்சைக்கான கருவிகள் 9 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிலும் வழங்கப்படும்

8)  8 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 18 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக மேம்படுத்தப்படும்.

9) 21 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் மேலும் 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

10) சென்னை மருத்துவக் கல்லூரியில் 6 கோடி ரூபாய் செலவில் நடப்பாண்டில் மாணவர்களுக்கு புதிய விடுதிகள் கட்டப்படும்.

11) சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் செலவில் புதியதாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் நிறுவப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ள இன்றைய முக்கிய அறிவிப்புகள்

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்