இந்தியாவின் இரு முகங்கள்

இந்தியாவின் இரு முகங்கள்

வரலாற்றில்  முதல் முறையாக நடந்து முடிந்த விடுதலை தின நிகழ்ச்சியில் திரு மோடி அவர்கள் வெட்டவெளியில், குண்டு துளைக்காத அரையின்றி, முன்னே தயாரிக்கப்பட்ட உரை இல்லாமல், மனதில் இருந்து பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த புரட்சிகர செயல்கள் ஒருபுறம் இருக்க. இந்த 68 ஆண்டுகளில் நமது இந்தியா கொண்டுள்ள இரு வேறு முகங்களை எங்களின் பார்வையில் இங்கே பதிவு செய்கிறோம்.

 

உலகிலேயே மிகப்பெரிய மக்கள் ஆட்சி முறை கொண்டுள்ள நாடு நம் இந்தியா. விடுதலை பெற்றபின் வழி தெரியாமல் சிக்கி சின்னாபின்னமாகும் என்று நினைத்த பல நாடுகளின் கணிப்பை பொய்யாக்கி வல்லரசு பாதையில் நின்னு நிதமாக களத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

 

உலகிலிலேய இரண்டாவது பெரிய ராணுவம் இந்தியாவில் உள்ளது.

சிறந்த திறமைசாலிகளை அயல்நாட்டிடம் அடகுவைத்து விட்டது இந்தியா. மைக்ரோசாப்டின் சத்யா நாடெல்லா, பெப்சி நிறுவனத்தின் இந்திரா நூயி, 30% நாசா விஞ்ஞானிகள் இந்தியர்கள்.

உலகிலேயே மிகப்பெரிய தபால் துறை அமைப்பு இந்தியாவில் உள்ளது.

28.7 கோடி வயது வந்தோர்கள் இன்னும் எழுத படிக்க இயலாமல் உள்ளோர். உலக தொகையில் 37விழுக்காடு இது.

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப துறைகளில்  இந்தியாவும் ஒன்று. நமது இந்திய பணியாளர்களை சார்ந்தே மற்ற நாடுகள் இயங்கும் நிலையில் உள்ளது.

2012 இல் 13754, 2011 இல் 14207, 2010 இல் 15963, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுளனர். படிச்சவன் எல்லாம் கோவணம் கட்டிட்டு எப்படா கலப்பை எடுப்பீங்க.

சுற்றுலா துறையில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.

20.85% நகர்புரத்திலும் 28.4% கிராமப்புறத்திலும் மக்கள் வீடு இல்லாமல் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்குநாள்  உயர்ந்து கொண்டே தான் போகிறது.

பருத்தி மற்றும் சனல் உற்பத்தியில் முன்னிலை வரிசையில் இந்தியா உள்ளது.

ஐநா அறிக்கைப்படி உழக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் தான் உள்ளது

வரகு உற்பத்தியில் முதலாவதாகவும் அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் இரண்டாவதாக உள்ளது.

சுமார் 7000 பேர் ஒரு நாளுக்கும் 25 லட்சம் பேர் ஒரு வருடத்திர்க்கும் பசியினால் இந்தியாவில் இறங்கின்றனர். 21.2கோடி பேர் ஊட்டசத்து குறைபாடுள்ள குழைந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.

தொலைதொடர்பு துறையில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட இரண்டாவது நாடு இந்தியா. அந்த துறையில் மிக குறைந்த கட்டண முறை கொண்ட நாடும் இந்திய தான்.

இந்தியா ஊழலில் உச்சம் தொலைதொடர்பு துறையில் நடந்த 2ஜி அழைக்கற்றை ஊழல். நமது பொருளாதார முடக்கதின் முக்கிய காரணம் இந்த ஊழல்கள் தான். இதன் எண்ணிக்கையும்  கூடிக்கொண்டு தான் உள்ளது.

இதுவரை 74 செயற்க்கை கோள்களை விண்வெளிக்கு இந்தியா அனுப்பிஉள்ளது

கன்னியாகுமரியில் இருந்து டெல்லி செல்ல ரயிலில் ஒரு சாதாரண குடுமகனுக்கு தேவை படும் காலம் 47மணி நேரம், அதாவது 2 நாட்கள், மணிக்கு 60கீமீ வேகத்தில். சீனாவில் 431கீமீ வேகம் செல்லும் ரயில் உள்ளது. அதில் சென்றால் ஏறக்குறைய 7.5மணி நேரத்தில் டெல்லியை சென்றடையலாம்.

 

காலையில் பல் துலக்கும் பொடியிலிருந்து, இரவு ஏற்றி வைக்கும் கொசுவத்தி வரை அனைத்திலும் பன்னாட்டு நிருவங்களின் பிடி!ஆனால் கம்பத்தில் பறக்க விடுவதற்கு மட்டும் தேசியகொடி!

நாட்டு வளம், காட்டு வளம், கடல் வளம், கனிம வளம் – அனைத்திலும் அந்நிய முதலீடு! இந்நிலையில் இவர்களுக்கு........நாங்க எதுவும் சொல்ல வரலீங்க....!


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்