உசைன் போல்ட்டுடன் மோத இருக்கும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்
பெங்களூர்,
உலகின் அதிவேக மனிதர் என்று வர்ணிக்கப்படும் ஜமைக்கைவை சேர்ந்த உசைன்போல்ட் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் முறையாக இந்தியா பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின் போது இந்தியா கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குடன் உசைன் போல்ட் மோத உள்ளார். இந்த சவாலானது ஓட்டபந்தயத்தில் இல்லாமல் கிரிக்கெட் போட்டியில் நடைபெறவுள்ளது.. தனியார் நிறுவனம் ஒன்றிற்கு இரு வீரர்களும் தூதரக உள்ளனர். இந்த நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகிற 2ஆம் தேதி யுவராஜ்சிங்கும் உசைன் போல்ட்டும் பெங்களூர் வருகின்றனர்.
அப்போது தனியார் நிறுவனம் ஒன்று இருவரும் இருவரையும் வேடிக்கையாக கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சவால் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
6 பந்தில் 6 சிக்சர் அடித்த யுவராஜ்சிங்குக்கு பந்து வீச ஆர்வமுடன் இருப்பதாக உசேன் போல்ட் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.