அஸ்வின் அதிரடி.. 5 விக்கெட் சாய்த்து அதகளம்.. சுருண்டு போனது இலங்கை

அஸ்வின் அதிரடி.. 5 விக்கெட் சாய்த்து அதகளம்.. சுருண்டு போனது இலங்கை

அஸ்வின் அதிரடி.. 5 விக்கெட் சாய்த்து அதகளம்.. சுருண்டு போனது இலங்கை

காலே: முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே பரபரப்பு பற்றிக் கொண்டு விட்டது. அஸ்வினின் அதிரடி சுழற்பந்து வீச்சில் சிக்கிய இலங்கை அணி சின்னாபின்னமானது. 5 விக்கெட்களைச் சாய்த்த அஸ்வின் இலங்கையின் முன்னணி வீரர்களை சுளுக்கெடுத்து விட்டார். குறிப்பாக அபாயகரமான சங்கக்கரா மற்றும் திரிமன்னே ஆகியோரை அவர் வீழ்த்தியது இந்திய அணிக்கு பெரும் நிம்மதியாக மாறியது.

இந்தியா இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஏஞ்செலா மாத்யூஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து இலங்கை தற்போது பேட் செய்து வருகிறது. ஆரம்பத்தில் சற்று அதிரடியாக ஆட முயற்சித்தது இலங்கை. இதனால் முதல் 3 விக்கெட்களை வேகமாக அது இழந்தது. குறிப்பாக இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சில் இலங்கை வீரர்கள் நன்றாக தடுமாறினார். அபாரமாக பந்து வீசிய இஷாந்த் சர்மா 7 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். மறுபக்கம் வருண் ஆரோன் ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட்டைச் சாய்த்தார். அதன் பின்னர் தாக்கியது அஸ்வின் சூறாவளி. எப்படியாவது தேறி விடலாம் என நினைத்து இலங்கையின் நினைப்பில் மண்ணைப் போட்டு விட்டார் அஸ்வின். அதிரடியாக பந்து வீசிய அவர் அடுத்தடுத்து விக்கெட்களைச் சாய்த்து இலங்கையை தடுமாற வைத்து விட்டார். திரிமன்னே, சங்கக்கரா, கேப்டன் மாத்யூஸ், ஜெகன் முபாரக், தம்மிக பிரசாத் ஆகியோர் அஸ்வின் பந்தில் வீழ்ந்தனர். இதில் சங்கக்கரா மிகவும் அபாயகரமானவர். அதேபோல தட்டுத்தடுமாறி அடித்து ஆட ஆரம்பித்த கேப்டன் மாத்யூஸும் 64 ரன்கள் எடுத்த நிலையில் வீழ்ந்தார். தற்போது இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து 179 ரன்களுடன் ஆடி வருகிறது. இந்தியா, இலங்கை இடையிலான டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்து வருகிறது. இந்திய அணி விராத் கோஹ்லி தலைமையில் இப்போட்டியைச் சந்திக்கிறது. இந்திய அணியில், ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே, விருத்திமான் சஹா, ஆர். அஸ்வின், ஹர்பஜன் சிங், அமீத் மிஸ்ரா, வருண் ஆரோன், இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 வேகப் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியுள்ளது. இலங்கை அணி மாத்யூஸ் தலைமையில் களம் கண்டுள்ளது. அந்த அணியில் திமுத் கருணரத்னே, கெளசல் சில்வா, குமார சங்கக்கரா, லஹிரு திரிமன்னே, தினேஷ் சண்டிமால், ஜெகன் முபாரக், ரங்கன ஹெராத், தம்மிக பிரசாத், நுவான் பிரதீப், தரிந்து கெளசல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்