அக்சார் படேல் சிறந்த பந்து வீச்சாளர் கிடையாது: சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனம்

அக்சார் படேல் சிறந்த பந்து வீச்சாளர் கிடையாது: சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனம்

அக்சார் படேல் சிறந்த பந்து வீச்சாளர் கிடையாது: சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனம்

புதுடெல்லி,

 

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் படேல் டெஸ்ட் போட்டிகளுக்கான தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் கிடையாது என்று கடுமையான விமர்சனங்களை கவாஸ்கர் முன்வைத்துள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும் கிரிக்கெட் வர்ணணையாளருமான சுனில் கவாஸ்கர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “ இந்தியா எதிர்பாக்கும் மாற்று சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் கிடையாது. ஏனெனில் அவர் பந்துகளை சுழல மட்டுமே வைக்கிறார். அவருக்கு பிளைட் பந்துகள் வீச தெரியவில்லை.

 

அவரது பந்துகள் எளிதில் கணித்துவிடக் கூடியதாகவே உள்ளது. பிட்ச் உதவி செய்தாலே தவிர அவரால் பந்துகளை திருப்பவே முடியவில்லை. அஸ்வின், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, கரண் சர்மாவிடம்தான் நாம் அதிகம் எதிர்பார்க்கலாம். ஆனால் நிச்சயம் அக்சர் படேலிடம்  எதிர்பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.  

கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான அக்சார் படேல் 18 ஒருநாள் போட்டிகளில்  23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்