வாசிம் அக்ரமுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி காட்டிய விராட் கோலி

வாசிம் அக்ரமுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி காட்டிய விராட் கோலி

இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ளன. நான்கிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 4-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.
 
முதல் போட்டி 12-ந்தேதி பெர்த்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் கோலி 91 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த போட்டியின்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், இடது கை வேகப்பந்து வீச்சாளரும் ஆன வாசிம் அக்ரம் டிவி வர்ணனையாளராக இருந்தார். போட்டி முடிந்த பின் விராட் கோலியிடம், 91 ரன்னில் அவுட்டாகிவிட்டீர்கள். சதம் அடிக்கும் வாய்பு போய்விட்டதே என்றார். இதற்கு விராட் கோலி ‘‘வாசிம் பாய், நான் சொல்வதை கேளுங்கள், இந்த தொடரில் நான் இரண்டு சதங்கள் விளாசுவேன்’’ என்று வாக்குறுதி கொடுத்தார்.
 
அதன்பின் பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் 59 ரன்னில் அவுட் ஆனார். ஆனால், மெல்போர்னில் நடைபெற்ற 3-வது போட்டியில் சதம் அடித்தார். பின்னர், நேற்று நடைபெற்று போட்டியிலும் சதம் அடித்தார். இதன்மூலம் வாசிக் அக்ரமுக்கு கொடுத்த வாக்குறுதியை கோலி நிறைவேற்றி காட்டியுள்ளார்.
 
இந்த தொடரில் நான்கு போட்டிகளில் 373 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 93.25 ஆகும். இந்த தொடரில் அதிவேகமாக 7000 ரன்னைக் கடந்தது. அதிவேகமாக 25 சதங்கள் அடித்தது போன்ற சாதனைகளையும் படைத்துள்ளார்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்