கண்ணீர் பேட்டி - குடிக்க தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்லை- ஒலிம்பிக்கில்

கண்ணீர் பேட்டி - குடிக்க தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்லை- ஒலிம்பிக்கில்

குடிக்க தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்லை- ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கணை ஓ.பி.ஜெய்ஷா கண்ணீர் பேட்டி


போட்டிகளில் மிகவும் கடினமானது மாரத்தான் போட்டி என்னும் தொடர் ஓட்ட போட்டி. இதில் நம் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டவர் ஓ.பி.ஜெய்ஷா. தேசிய சாதனையை தன் வசம் வைத்துள்ளவர்.
ஒவ்வொரு இரண்டரை கிலோமீட்டருக்கும் இடையே ஒவ்வொரு நாட்டின் சார்பாக வீரர்களுக்காக தண்ணீர் குளுக்கோஸ், மருந்துகள், துடைக்கும் துண்டு போன்றவை இருக்கும். மருத்துவர்களும் உடன் இருப்பார்கள்.
இந்தியாவில் சார்பில் வைக்கப்பட்டிருந்த அத்தனை அரங்குகள் மட்டும் காலியாக இருந்திருக்கிறது. அடுத்த அரங்கில் இருப்பார்கள், அதற்கு அடுத்த அரங்கில் தண்ணீர் இருக்கும் என தேடி தேடி ஓடியிருக்கிறார் ஜெய்ஷா. ஆனால் கடைசி வரை ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.
மற்ற நாடுகளிடம் தண்ணீர் கொடுங்கள்,மருந்து கொடுங்கள் என்று பிச்சையா கேட்க முடியும். விடாமல் ஓடியிருயிக்கிறார். மற்றவர்கள் எல்லாம் ஓடி முடித்துவிட்டாலும் இலக்கையாவது எட்டி விடலாம் என ஓடியிருக்கிறார். மனம் தயாராக இருந்தாலும் , காலும், உடலும் கேட்கவில்லை.
சூரிய வெப்பத்தில் சுருண்டு விழுந்திருக்கிறார். பேச்சு மூச்சு இல்லாமல் மூர்ச்சையாகியிருக்கிறார். ஒலிம்பிக் அமைப்பினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். நம்ப சற்று சிரமம் தான் . அவருக்கான நினைவினை கொண்டு வர 8 பாட்டில் டிரிப்ஸ் ஏற்றியிருக்கிறார்கள். கண் விழித்தது வெட்கத்தில் வெடித்திருக்கிறார் இந்த வீராங்கணை.
தோழியே கவலை வேண்டாம் இந்திய அதிகாரிகள், அரசியல்வாதிகள் உன்னை கைவிட்டிருக்கலாம், இந்தியர்கள் உன்னை கைவிட மாட்டோம் எங்களுக்கு நீயும் தங்க மங்கை தான்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்