3-வது டி-20 போட்டி: இந்திய அணி த்ரில் வெற்றி

3-வது டி-20 போட்டி: இந்திய அணி த்ரில் வெற்றி

3-வது டி-20 போட்டி: இந்திய அணி த்ரில் வெற்றி
 
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டி-20 ஓவர் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் அபாரமாக வென்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி-20 ஓவர் போட்டி தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் 3-வது போட்டி இன்று நடைபெற்றது. 3-வது டி-20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஷேன் வாட்சன் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி அதிபட்சமாக ஆஷிஸ் நெஹ்ரா, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் ஒரு விக்கெட்டை வீழ்ததினர்.
 
இதனையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பெற்றி பெற்றது.  இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா-ஷிகர் தவான் சிறப்பான தொடக்கம் தந்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 52, விராத் கோஹ்லி 50, சுரேஷ் ரெய்னா 49 ரன்கள் எடுத்தனர். இறுதியில் யுவராஜ்-ரெய்னா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வித்திட்டனர். ஆஸ்திரேலியா அணியில் கேமரூன் பாய்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டி-20 போட்டியை முழுமையாக கைப்பற்றியதால் ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்