நம்ம ஊரு பேருந்து நிலையத்தில் இடையூறு செய்யும் இருசக்கர வாகனங்கள்
கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்து கள் நிறுத்த இடையூறு ஏற்படுத்தும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை சமந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுப்படுத்தி வகைபடுத்தினால் நன்றாக அமையும்.
கரூர் நகரின் மையப்பகுதியில் குறுகிய இடத்தில் நமது பேருந்து நிலையம் செயல் பட்டு வருகிறது. தினமும் 500க்கும் மேற்பட்ட பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல் வதால் எந்த நேரமும் மக்கள் நெருக்கடியுடன் நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில், வெகு நாட்களாக பேரூந்துகள் வரிசை யாக நிறுத்தி வைக்கப்படும் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் பேருந்துகள் புறப்பட்டு செல்வதற்கு இடையூறாக நிறுத்தப்பட்டு வருகிறது.
இதனால், பல்வேறு தொந்தரவுகள் இந்த பகுதியில் ஏற்பட்டு வருகிறது. எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் வண்டிகளை நிறுத்திட நடவடிக்கை எடுத்தால் சிறப்பு.
பேருந்து நிலயத்தை வேறு நல்ல இடத்தில் மாற்றி பெரிதாக்க முயற்சி செய்தால் இன்னும் சிறப்பு. சில முதலாளிகளின் சுயநலத்திர்க்காக நமது ஊரின் நலன் சிதரிக்கிடக்கிறது. மக்கள் சிந்திக்க ஏன் மறுக்கின்றனர் என்று தான் புரியவில்லை!