ரூ.133 கோடி மதிப்பில் கரூரில் வளர்ச்சி பணி நடந்துள்ளதாக நகராட்சித் தலைவர் தகவல்

ரூ.133 கோடி மதிப்பில் கரூரில் வளர்ச்சி பணி நடந்துள்ளதாக நகராட்சித் தலைவர் தகவல்

கரூர் நகராட்சியில் கடந்த 2011 ம் ஆண்டில் இருந்து 133.25 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம், என நகராட்சி தலைவர் செல்வராஜ், தெரிவித்தார்.

  • கரூர் மக்களின் 40 ஆண்டுகளாக குடிநீர் பிரச்னைக்கு தீர்க்க 68 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதிய காவிரி குடிநீர் திட்டம்.
  • ஒருங்கிணைந்த நகர்புற அபிவிருத்தி திட்டம் 2011-12 ஆண்டில் 15 கோடியே 50 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள்.
  • ஒருங்கிணைந்த நகர்புற அபிவிருத்தி திட்டம் 2012-13 ம் ஆண்டில் ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிக்கால் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள்.
  • தமிழ்நாடு நகர்புற சாலை அபிவிருத்தி திட்டம் 2012-13 ல் இரண்டு கோடியே ஒன்பது லட்சம் மதிப்பில் சாலை பணி.
  • வறட்சி நிவாரண திட்டம் 2012-13 ல் இரண்டு கோடியே 36 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் குடிநீர் பணி.
  • ஒருங்கிணைந்த நகர்புற அபிவிருத்தி திட்டம் 2013-14 ம் ஆண்டில் ஐந்து கோடியே 72 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணி.
  • இரண்டு கோடியே 60 லட்சம் மதிப்பில் உட்கட்டமைப்பு பணி.
  • கரூர் நகர போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருமாநிலையூரில் 12.14 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் ஸ்டாண்டு அமைக்கும் பணி, ஐந்து ரோடு-பசுபதிபாளையம் இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே 13 கோடியே 75 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி.

ஆகிய பணிகள்  அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

இனி செயல்படுத்தபோவது :

  • ஏழு கோடி ரூபாய் மதிப்பில் பஸ் ஸ்டாண்டு அருகே நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம்.
  • நகராட்சி பகுதியான பெரிய குளத்துபாளையம், வடக்கு பசுபதிபாளையத்தில் ரயில்வே இருப்பு பாதையை வரைவாக கடந்து செல்ல 13 கோடியே 20 லட்சம் மதிப்பில் சுரங்க பாதை.

ஆகிய இரண்டு திட்டங்களும்  கொண்டு வரப்பட்டுள்ளது என நகராட்சி தலைவர் கூறியுள்ளார்..

பல்வேறு திட்டங்கள், அதற்க்கு பல கோடி ரூபாய் செலவுகள். எமது கண்களுக்கு மட்டும் எதுவும் தெரியாமல் போகிறது. திட்டங்கள் எல்லாம் கேட்க நல்ல தான் இருக்கு, ஆனா  நான் பார்துக்கொண்டிருக்கின்ற கரூர் இன்னும் அப்படியே தான் இருப்பது போல தோன்றுகிறது. யாராவது விளக்கம் தாருங்கள்....


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்