அறிவிக்கப்படாத மின்வெட்டு - நமக்கு தறி இயக்குவது சிரமமானது
நமது கரூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களை அவதிக்குள்ளாகி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் மின்வெட்டு நேரம் அடிக்கடி மாறுகிறது. 2 மாதத்திற்கு முன்னர் காற்றாலை மின்சாரம் கிடைத்ததால் தினமும் 2 மணிநேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது. தற்போது காற்றாலை மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் மின்வெட்டு நேரமும் அதிகரித்து விட்டது. சில மாதங்களாக மின்வெட்டு இல்லை என்கிற நிலைமை தொடர்ந்தது. இதனால் சிறுதொழில் நடத்துவோர் மகிழ்ச்சியடைந்தனர்.
இன்று தினம்தோறும் 2 மணிரேம் அறிவிக்கப்பட்ட மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இருந்தாலும் நேரம் அறிவிக்கப்படாமல் திடீர் திடீர் என மின்தடை ஏற்படுகிறது. பல மணிநேரம் மின்வெட்டை விட அறிவிக்கப்படாத 2 மணிநேர மின்வெட்டு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக வர்த்தகர்கள், கடைக்காரர்கள் வருத்தபடுகின்றனர்.
அறிவிப்பின்றி மின்தடை ஏற்படுவதால் மின்சாதனங்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தறிக்கூடங்களில் ஒருமுறை மின்தடை ஏற்பட்டால் தறிநூலை சரிசெய்வதற்கு பலமணி நேரம் வேலை செய்ய வேண்டியதிருக்கிறது. அதனை சரிசெய்து தறியை இயக்கினால் மீண்டும் மின்சாரம் போய்விடுகிறது. எனவே முன்பு போல பகுதி வாரியாக மின்தடை நேரத்தை அறிவித்து மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதே நிலைமைதான் கொசுவலை உற்பத்தி தொழிலுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
பொதுமக்களும் இதனால் பாதிப்பு ஏற்படுவதாக புலம்புகின்றனர்.
அவர்களால் சமையல் வேலைகளை செய்ய முடியவில்லை. முன்னதாகவே நேரம் அறிவித்து மின்சாரத்தை நிறுத்துவது கூட சமாளிக்க ஏதுவாக இருந்தது. இதனை சமந்தபட்டவர்கள் கவனித்தால் நன்று.