தடையை மீறி மீண்டும் நெகிழிப் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு : நமது ஊரின் சுகாதாரம் சீர்கெடுகிறது

தடையை மீறி மீண்டும் நெகிழிப் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு : நமது ஊரின் சுகாதாரம் சீர்கெடுகிறது

கரூரில் நெகிழிக் கோப்பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரித்திருப்பதால், ஆங்காங்கே மலை போல் குவிந்து, சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. கரூர் நகரம் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் தேனீர் கடை  மற்றும் மளிகைக்கடை, உணவகங்கள் போன்றவற்றில் நெகிழிக் கோப்பைகள்  (பிளாஸ்டிக் கப்) மற்றும் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவை எளிதில் மக்கும் தன்மை கிடையாது. மறுமுறை பயன்படுத்தவும் முடியாது. இந்த நெகிழிப் பொருள்களால் , சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. நகராட்சி பகுதிகளான கரூர், இனாம்கரூர், தாந்தோணி பகுதிகளில் உள்ள அனைத்து தேநீர் கடைகளிலும் நெகிழிக் கோப்பைகள் பயன்படுத்தக்கூடாது, என தடை விதிக்கப்பட்டது. இது குறித்து, நகராட்சியிலும் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் கரூரில் ரெட்டை வாய்க்கால் உட்பட பல்வேறு வடிகால்களில், நெகிழிக் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால், கழிவு நீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. துப்புரவு பணியாளர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த நெகிழிப் பயன்பாட்டை தடை செய்யவேண்டும், என பல்வேறு சமூக நல இயக்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, பெயரளவுக்கு அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தி நெகிழிக் கோப்பைகள் பறிமுதல் செய்து அழித்தனர். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிக் கோப்பைகள், சிறு நெகிழிப் பைகள் இவைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினர். துண்டு பிரசுரங்களும், அவ்வப்போது வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து, தேனீர் கடைகளில் நெகிழிக் கோப்பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து பேப்பர் கப் அல்லது கண்ணாடி கிளாஸ்களில் தான் டீ வழங்கப்பட்டு வந்தது. தொடர் கண்காணிப்பு இல்லாததால், மீண்டும் நெகிழிக் கோப்பைகள் கடதேனீர்கடை மட்டுமின்றி, திருமண மண்டபங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் நெகிழிக் கோப்பைகள் கழிவுபொருட்கள் குவிந்து கிடக்கின்றன. நகராட்சி நிர்வாகம் நெகிழிப் பொருட்களுக்கு தடைவிதித்து, இரண்டு ஆண்டாகியும் பயனில்லை. மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒத்துழைப்புடன், "நெகிழிப் பொருட்களின்  தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

நாமும் கொஞ்சம் விழிப்புணர்வோடு நடக்க  முயன்றால் சிறப்பாக அமையும். சிந்திப்போம் கரூர் வாசிகளே


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்