கரூர் பேருந்து நிலைய பகுதியில் ஊர்ந்து செல்லும் சிற்றுந்து: ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை-காவல் துறை எச்சரிக்கை

கரூர் பேருந்து நிலைய பகுதியில் ஊர்ந்து செல்லும் சிற்றுந்து: ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை-காவல் துறை எச்சரிக்கை

 கரூர் பேருந்து நிலைய பகுதியில் ஊர்ந்து செல்லும் சிற்றுந்து ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் கூறியுள்ளார்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோசிநிர்மல் குமார் உத்தரவின் பேரில் சிற்றுந்து உரிமையாளர்கள், ஓட்டுனர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு ஆய்வாளர் நாகராஜன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

சில சிற்றுந்து ஓட்டுனர்கள் விதி முறை மீறி பேருந்தை இயக்கப்படுவதாக பொது மக்களிடம் இருந்து புகார் வந்து உள்ளது. எனவே அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் மட்டும் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். குடி போதையில் சிற்றுந்து இயக்கப்படுவது கண்டு பிடித்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் பேருந்து நிலைய பகுதியில் சில சிற்றுந்துகள் ஊர்ந்து செல்கிறது. இதனால் பேருந்து நிலைய பகுதியில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் என அனைவருக்கும் அதிக அளவு சிரமம் ஏற்படுகிறது.

எனவே பேருந்து நிலைய பகுதியில் ஊர்ந்து செல்லும் சிற்றுந்து ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிற்றுந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கண்டிப்பாக சீருடை அணிய வேண்டும். கட்டாயம் ஓட்டுனர் உரிமம் வைத்து இருக்க வேண்டும். வழித்தடம் மாறி  இயக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

நல்ல செயல்தான். மக்கள் ஆகிய நாமும் ஆதரவு தருவோம்.. நமது ஊர் போக்குவரத்து காவல் துறைக்கு வாழ்த்துக்கள் கூறுவோம்


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்